இராபர்ட் முகாபே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராபர்ட் கேப்ரியல் முகாபே (Robert Gabriel Mugabe, பெப்ரவரி 21, 1924 – செப்டம்பர் 6, 2019) சிம்பாப்வே புரட்சியாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சிம்பாப்வேயின் பிரதமராக 1980 முதல் 1987 வரையும், 1987 முதல் 2007 வரை அரசுத்தலைவராகவும் இருந்துள்ளார். சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியத்தின் தலைவராக 1975 முதல் 2017 வரை இவர் பணியாற்றினார். ஆப்பிரிக்கத் தேசியவாதியாகக் கருதப்பட்ட முகாபே 1970கள்-80களில் மார்க்சிய-லெனினியவாதியாகவும், 1990கள் முதல் சமூகவுடைமையாளராகவும் அடையாளம் காணப்பட்டார். இவரது அரசியல் செயற்பாடுகள் "முகாபேயியசம்" என அழைக்கப்பட்டது.
1998 முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின.[1] 2008இல் இவரின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவை தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோற்றது.
Remove ads
ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக
ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக ராபர்ட் முகாபே 30.1.2015 பொறுப்பேற்றார்.
எத்தியோப்பியத் தலைநகர் ஆடிஸ் ஆபபாவில் நடைபெறும் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில், முன்னாள் தலைவர் ஏபல் அஜீஸிடமிருந்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றார்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads