மோர்கன் சுவாங்கிராய்
சிம்பாப்வேயின் முன்னாள் பிரதம மந்திரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோர்கன் ரிச்சார்ட் சுவாங்கிராய் (Morgan Richard Tsvangirai; மார்ச் 10, 1952 - பெப்ரவரி 14, 2018) என்பவர் சிம்பாப்வேயின் ஒரு பிரபல தொழிற்சங்கத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். சனநாயக மாற்றத்துக்கான இயக்கம் என்ற முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இக்கட்சியே ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது[1]. 2002 இல் இடம்பெற்ற அதிபார் தேர்தலில் ரொபேர்ட் முகாபேயுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற அதிபருக்கான முதற் சுற்றுப் போட்டியில் முன்னணியில் இருந்தாலும் அதிகாரபூர்வ முடிவுகளின்படி அவரால் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. நாட்டில் முகாபே ஆதரவாளர்களினால் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றமையைக் காரணம் காட்டி ஜூன் 27 இல் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது என அவர் குற்றம் சாட்டினார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads