ரோகில்லாக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரோகில்லாக்கள் அல்லது ரோகில்லா பதான்கள் (Rohilla Pathans (பஷ்தூ: روهیله, Urdu: روہیلہ, Hindi: रोहिला), அல்லது ரோகில்லா ஆப்கானியர்கள் (Rohilla Afghan), இந்தியாவில் வாழும் உருது மொழி பேசும் ஆப்கானிய பஷ்தூன் மக்கள் ஆவர். இம்மக்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தின் பரேலி மாவட்டம், ஷாஜகான்பூர் மாவட்டம், இராமப்பூர் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர். இம்மக்கள் பஷ்தூ, உருது, இந்தி மொழிகள் பேசுகின்றனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Remove ads

வரலாறு

ஆப்கானித்தான் நாட்டு பஷ்தூன் மக்களின் வழித்தோன்றல்களே, இந்தியாவின் ரோகில்லாக்கள் ஆவார்.முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் போது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர், அவத் மற்றும் ரோகில்கண்ட் பகுதிகளில் ஆப்கானிய ரோகில்லா இன மக்கள் குடியேறி கூடுதலாக வாழ்கின்றனர்.[1] [2]

1947 இந்தியப் பிரிவினையின் போது இந்திய ரோகில்லா இன மக்கள், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் கராச்சி நகரத்தில் குடியேறினர்.

மூன்றாம் பானிபட் போரில் ரோகில்லாக்கள்

மராத்தியப் பேரரசுக்கும், ஆப்கானித்தானின் துராணிப் பேரரசுக்கும் இடையே கிபி 1761ல் பானிபட்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் 40,000 ரோகில்லா படைகள், ஆப்கானிய துராணிப் படைகளுடன் இணைந்து மராத்தியப் படைகளுக்கு எதிராக போரிட்டனர்.[3] போரில் மராத்தியர்கள் தோல்வியடைந்ததால், இந்தியாவில் ரோகில்லா இன மக்களின் அரசியல் செல்வாக்கு கூடியது.

ராம்பூர் இராச்சியத்தை நிறுவுதல்

Thumb
ராம்பூர் இராச்சியத்தின் கொடி
Thumb
நவாப் முகம்மது கான் பாங்கஷ், 1730

இந்தியாவில் கம்பெனி ஆட்சியினர், ரோக்கில்லாக்கள் ஆண்ட ராம்பூர் இராச்சியத்தை மட்டும் விட்டு விட்டு, ரோகில்கண்ட் பகுதியின் மற்ற அனைத்து இந்திய மன்னராட்சிப் பகுதிகளை, பிரித்தானிய இந்திய அரசில் இணைத்துக் கொண்டனர்.

மேலதிகத் தகவல்கள் ராம்பூர் இராச்சிய நவாபுகள், ஆட்சித் தொடக்கம் ...

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857ன் போது, கான் பகதூர் கான் தலைமையில் ஆப்கானிய ரோகில்லா பஷ்தூன் படைவீரர்கள், கிழக்கிந்திய கம்பெனிப் படைகளுக்கு எதிராக போராடினர்கள்.[4] சிப்பாய் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தால், பல ரோகில்லா படைவீரர்கள், சுரினாம், குயானா போன்ற இந்தோ-கரிபியன் தீவுகளுக்கு நாடு கடததப்பட்டனர்.[4]

Remove ads

1857 -1947களுக்கு இடையில் ரோகில்லாக்கள்

தற்காலத்தில் ரோகில்லா மக்கள், வட இந்தியாவில் பல பிரதேசங்களில் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக உத்திரப் பிரதேச பதான்கள், பிகார் பதான்கள், பஞ்சாப் பதான்கள், ராஜஸ்தன் பதான்கள், குஜராத் பதான்கள், கராச்சி பதான்கள் எனப் பல பிரிவினர்களாக பரவி வாழ்கின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads