ரோகில்கண்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரோகில்கண்ட் (Rohilkhand) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடமேற்கு பகுதிகளாகும். இப்பகுதியினை ரோகில்கண்ட் என இங்கு குடியேறிய ஆப்கானிய பஷ்தூன் மக்களால் பெயரிடப்பட்டது. எனவே இப்பகுதியில் வாழ்ந்த ஆப்கானிய பஷ்தூன் இன மக்களை ரோகில்லா பதான்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அழைப்பர். [1]

மகாபாரத இதிகாசத்தில் ரோகில்கண்ட் பகுதியை மத்சய நாடு எனக் குறிப்பிட்டுள்ளது. [2]
Remove ads
புவியியல்
கங்கைச் சமவெளியின் மேற்பகுதியில் 25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வளமான வண்டல் மண் கொண்ட நிலப்பகுதியாகும். ரோகில்கண்ட் பகுதியின் தெற்கில் கங்கை ஆறும். மேற்கில் உத்தராகண்டம் மாநிலம், வடக்கில் நேபாளம், கிழக்கில் அவத் இராச்சியப் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டது.
ரோகில்கண்ட் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம், மொராதாபாத் மாவட்டம், ராம்பூர் மாவட்டம், பிஜ்னோர் மாவட்டம், பிலிபித் மாவட்டம், ஷாஜகான்பூர் மாவட்டம், பதாவுன் மாவட்டங்கள் அடங்கியிருந்தது.
Remove ads
வரலாறு
இராஜபுத்திர குல மன்னர்களின் எழுச்சியை அடக்க மொகலாய மன்னர் அவுரங்கசீப் ஆப்கானிய முரட்டு பழங்குடி மக்களான பஷ்தூன் மக்களை இப்பகுதியில் கூட்டம் கூட்டமாக குடியமர்த்தினார். [3][3][4] பஷ்தூன் மொழியில் ரோ எனில் மலைகள் என்று பொருள். எனவே ரோகில்லாக்கள் எனில் மலை மக்கள் எனப் பொருள்படியாக இப்பகுதியை ரோகில்கண்ட் என பெயரிட்டனர். இவர்களது தலைநகரம் பரேலி நகரம் ஆகும்.[1]
மராத்தியப் படைகள் 1751–1752-ஆம் ஆண்டில் ஆப்கானியர்கள் ஆண்ட ரோகில்கண்ட் பகுதியையும், அயோத்தி நவாபிடமிருந்து அவத் இராச்சியத்தையும் கைப்பற்றினர். [5] போரில் தோற்ற ஆப்கானிய ரோகில்லாக்கள் தற்கால உத்தராகண்டம் மாநில குமாவுன் மலைப்பகுதிகளில் புகழிடம் அடைந்தனர்.
பின்னர் 1761-இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானி மராத்தியர்களை வென்று, தில்லியை கைப்பற்றியவுடன், [6] குமாவுன் மலைப்பகுதியில் இருந்த ஆப்கானிய பஷ்தூன் மக்கள் மீண்டும் ரோகில்கண்ட் பகுதியில் குடியேறினர்.
கம்பெனி ஆட்சியின் போது ரோகில்கண்ட் பகுதியை ஆண்ட ஆப்கானிய மன்னர்கள், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை திறை செலுத்தி, ஆங்கிலேயர்களுக்கு அடங்கி ஆண்டனர்.
இந்தியா விடுதலைக்குப் பின்னர் ரோகில்கண்ட் பகுதி உத்தரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
ஆட்சியாளர்கள்
பரேலி நகரை தலைநகராகக் கொண்டு ரோகில்கண்ட் பகுதியை ஆப்கானிய ரோகில்லாக்கள் 1719 முதல் 1858 முடிய ஆண்டனர். சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் ரோகில்கண்ட் பகுதி ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் சென்றது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads