லசித் மாலிங்க

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் From Wikipedia, the free encyclopedia

லசித் மாலிங்க
Remove ads

சபரமாது லசித் மாலிங்க (Separamadu Lasith Malinga,சிங்களம்: සපරමාදු ලසිත් මාලිංගபிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.[1] இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

பன்னாட்டு இருபது20 போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சாகித் அஃபிரிடி உள்ளார். 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 , 2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடர்களில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மார்ச் 7, 2016 வரை இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.[3][4][5]

Remove ads

குறிப்பிடத்தக்க அம்சங்கள்

இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் சூப்பட் எட்டு போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு இலக்குகளை வீழ்த்தினார்.

சர்வதேச போட்டிகள்

தேர்வுத் துடுப்பாட்டம்

சூலை 1, 2004 இல் டர்வினில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் டேரன் லீமனை இருமுறையும், அடம் கில்கிறிஸ்ற், டேலியன் மார்ட்டின், ஷேன் வோர்ன் மற்றும் மைக்கேல் காஸ்புரோவிஸ் ஆகிய ஆறு இலக்குகளை வீழ்த்தினார்.[6] இவர் ஆத்திரேலிய அணியினருடன் நட்பு பாராட்டும் விதமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு அடம் கில்கிறிஸ்ற் அடிக்கட்டை ஒன்றை பரிசாக கொடுத்தார்.[7]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 123 ஆவது வீரராக இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.[8]

Remove ads

உள்ளூர்ப் போட்டிகள்

இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடி சிறப்பான பக்களிப்பை அளித்தார். சச்சின் டெண்டுல்கர். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக்கரமாக உள்ளார் என இவரைப்பற்றி கூறியுள்ளார். மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஷான் பொலொக் இந்தத் தொடரின் முதல் பருவத்தில் இந்த அணியின் தலைவராக இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 95 ஓட்டங்களுக்குள் வீழ்த்த உதவினார்.

டிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[9]

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads