லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே

From Wikipedia, the free encyclopedia

லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே
Remove ads

லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே (Ladakh Autonomous Hill Development Council, Leh (LAHDC Leh), இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த லே மாவட்ட மலை வளர்ச்சிப் பணிகளை தன்னாட்சியுடன் நிர்வகிப்பதற்கு இந்த வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டது. இதன் தலமையிடம் லே நகரம் ஆகும்.[4]

விரைவான உண்மைகள் லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே, வகை ...
Remove ads

வரலாறு

லடாக் பிரதேச மக்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் கவுன்சில் சட்டம், 1995-இன் படி, லே மாவட்ட வளர்ச்சிக்கு லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே, மற்றும் 2003-இல் கார்கில் மாவட்ட வளர்ச்சிக்கு லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் அமைக்கப்பட்டது.[5]

அதிகாரங்கள்

தன்னாட்சி மலைக் குழுக்கள் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, பொருளாதார வளர்ச்சி, கல்வி, நிலப் பயன்பாடு, வரி விதிப்பு, உள்ளாட்சி மற்றும் ஊராட்சி ஆளுகைத் திறன் மேம்பாடு விரித்து கொள்கை முடிவு எடுத்தல், ஊராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் முக்கியப் பணியாகும்.[6]லடாக் ஒன்றியப் பகுதியின் துணை-நிலை ஆளுநர், இப்பகுதியில் சட்டம் & ஒழுங்கு, நீதிமன்றம், கல்லூரி & பல்கலைகழகங்கள், தொலைதொடர்பு வசதிகளை நிர்வகிப்பார்.

Remove ads

தன்னாட்சிக் குழு

தன்னாட்சி குழு 30 கவுன்சிலர்கள் கொண்ட அமைப்பாகும். இதில் 26 கவுன்சிலர்கள் தேர்தல் முறையில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். நியமன உறுப்பினர்கள் 4.[7]தன்னாட்சி அமைப்பின் நிர்வாகக் குழுவில் தலைமை நிர்வாக கவுன்சிலர் மற்றும் 4 பிற நிர்வாகக் க்வுன்சிலர்கள் இருப்பர்.[8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads