லட்சுமி மஞ்சு
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
லட்சுமி மஞ்சு (ஆங்கிலம்: Lakshmi Manchu) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[1][2] இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில ஆங்கில மொழி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
Remove ads
வாழ்க்கை
இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்தார். இவர் மோகன் பாபு என்ற நடிகரின் ஒரே மகள். இவருக்கு மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜ் என்னும் தம்பிகள் உள்ளனர்.
பிறப்பும் ,கல்வியும்
நடிகர் மோகன் பாபுவுக்கும் வித்யா தேவிக்கும் பிறந்த ஒரே மகள் லட்சுமி மஞ்சு. 1977 அக்டோபர் 8 இல் பிறந்தார் . ஓக்லஹோமா நகர பல்கலைக்கழகத்தில் தியேட்டரில் இளங்கலைப் பட்டம் பெற்று, அதன் பிறகு பிலிம் புரொடக்சன் திரைப்படத்திற்கான யு.எஸ்.சி. சான்றிதழும் பெற்றுள்ளார்
திரைத்துறை
4 வயதில் தனது திரைவாழ்க்கையைத் துவக்கிய மஞ்சு, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட 20 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி பிரசன்னா பிக்சர்ஸ் உடன் இணைந்து சுமார் ஐம்பத்தி ஆறு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கன் தொலைக்காட்சித் தொடரான லாஸ் வேகாஸில் சரஸ்வதி குமார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் டெஸ்பேரேட் வொய்ப்ஸ் , லேட் நைட் வித் மை லவ்வர், மிஸ்டரி ER போன்ற தொடரிலும் நடித்துள்ளார் .டிசம்பர் 2011 இல், மணிரத்னத்தின் தமிழ்த் திரைப்படமான கடல் படத்தில் செலீனா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் .
குறும்படமும் ,விளம்பர படங்களும்
அவர் டொயோட்டா, AARP மற்றும் செவ்ரோலெட் ,சொகுசு கார் விளம்பர படங்களிலும் தோன்றினார். [5] வரவிருக்கும் அமெரிக்க படமான பாஸ்மதி ப்ளூஸ்ஸிலும் அவர் நடிக்கிறார். [6] 2006 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸில் பெர் பெக்ட் லைவ்ஸ் என்ற குறும்படத்தை வில்சிர் பைன் ஆர்ட்ஸுக்காகவும் , லா பெம்மி பிலிம் விற்காகவும் எடுத்தார் . .
சொந்த வாழ்க்கை
இவருடைய முதல் திருமணம் பிரசன்னா என்பவருடன் நடந்தது .ஆனால் நீடிக்கவில்லை ,எனவே விவாகரத்து ஆனது. லக்ஷ்மி மஞ்சு 2006 ஆகஸ்ட் 4 , ஆண்டி ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி வாடகை தாய் முறையில் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக ஆனார்.
திரைப்படங்கள்
- THE ODE 2008 ஆங்கிலம்
- DEAD AIR 2009 ஆங்கிலம்
- THANK YOU FOR WASHING 2009 ஆங்கிலம்
- அனகனாக ஓ தீருடு 2011 தெலுங்கு
- டோன்கள முத்த 2011 தெலுங்கு
- டிபார்ட்மென்ட் - இந்தி
- ஊ கொடத்தாரா? உளிக்கி படத்தாரா? -தெலுங்கு
- கடல் (2013) - தமிழ்
- குண்டேல்லோ கோடரி (2013) - தெலுங்கு
- டூசுகெளத 2013 தெலுங்கு
- மறந்தேன் மன்னித்தேன் (2013) - தமிழ்
- சந்தமாமா காதலு 2014 தெலுங்கு
- புடுகு 2015 தெலுங்கு
- டோங்காட்ட 2015 தெலுங்கு
- காற்றின் மொழி 2018 - தமிழ்
Remove ads
குறும் படங்கள்
தயாரித்தவை
விருதுகள்
- நந்தி விருது
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads