லாக்கெட் சாட்டர்ஜி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாக்கெட் சாட்டர்ஜி (Locket Chatterjee) (பிறப்பு: 1974 திசம்பர் 4 ) இவர் ஒரு வங்காள நடிகையும், இந்திய அரசியல்வாதியுமாவார். இவர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட. இவர் பரதநாட்டியம், கதகளி, மணிப்பூரி ஆகியவற்றை கற்றிருக்கிறார்.[2] ஆனால் இவர் ஒரு நடிகையாக நன்கு அறியப்பட்டவர். மேற்கு வங்காளத்தின் பாரதிய ஜனதா கட்சியின்]] பெண்கள் பிரிவான பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.[3]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
சாட்டர்ஜியின் தந்தை அவரது தாத்தாவைப் போலவே ஒரு புரோகிதர் ஆவார். இவருடைய தாய் அபர்ணா சாட்டர்ஜி இவரை நடனப் பள்ளியில் கொண்டுச் சேர்த்தார். சாட்டர்ஜி எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்தபோதே மம்தா சங்கர் பாலே குழுவுடன் வெளிநாடு சென்றார்.[4] கங்கையின் வடக்கு கரையின் புறநகர்ப் பகுதியான கொல்கத்தாவின் தக்சினேசுவர் பகுதியில் இவர் வளர்ந்தார்.[5]
பின்னர், கொல்கத்தாவின் பழமையான மற்றும் மதிப்புமிக்க மகளிர் கல்லூரிகளில் ஒன்றான கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜோகமயா தேவி கல்லூரியில் அறிவியலில் இளங்கலை படித்தார்.[6]
Remove ads
அரசியல் வாழ்க்கை
லாக்கெட் சாட்டர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியல் அரங்கில் நுழைந்தார். பின்னர் இவர் அக்கட்சியினுடனான உறவுகளைத் துண்டித்து 2015இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் மேற்கு வங்காளத்தின் மயூரேசுவரில் இருந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அகில இந்திய திரினாமுல் காங்கிரசு கட்சியின் அபிஜித் ராயிடம் தோற்றார். 2017ஆம் ஆண்டில் ரூபா கங்குலிக்கு பதிலாக மேற்கு வங்கத்தில் [பாரதிய ஜனதா கட்சியின் மகிலா மோர்ச்சாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
ரத்னா தே என்பவருக்கு எதிராக ஹூக்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து 2019 ஆம் ஆண்டு போட்டியிட்டு 6,71,448 (46.06%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2019 செப்டம்பர் 13 அன்று, தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2019 அக்டோபர் 9 முதல் இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான குழு உறுப்பினராக பணியாற்றுகிறார்.
Remove ads
தொலைக்காட்சி
மா மனாஷா (ஈடிவி பங்களா) [5], போலோபாஷா தேகே ஜெய் (ஈடிவி பங்களா) [7] மற்றும் தருண் மஜும்தார் இயக்கிய துர்கேஷ் நந்தினி ஆகியோரின் பாங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் புதினத்தின் தொலைக்காட்சி தழுலில் முன்னி பாய் வேடத்தில் லாக்கெட் நடித்தார் [8]
குடும்பம்
லாகெட் சாட்டர்ஜி பிரசென்ஜித் பட்டாச்சார்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.[9]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads