லியாகத்-நேரு ஒப்பந்தம்
இந்திய விடுதலைப் போராட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லியாகத்-நேரு ஒப்பந்தம் அல்லது தில்லி ஒப்பந்தம் 1950 (Liaquat–Nehru Pact or Delhi Pact) என்பது 1950 ஏப்ரல் 8 ஆம் நாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலி கான் ஆகியோருக்கிடையில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடு ஆகும்.[1] இந்தியப் பிரிவினையை அடுத்து, மேலும் பிரிவினைகளையும், கலவரங்களையும் தடுக்கும் பொருட்டு, தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற்ற உச்சக் கட்டப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாடு புது தில்லியில் கையெழுத்திடப்பட்டது. அகதிகள் எவ்வித இடைஞ்சல்களும் இன்றித் தமது உடைமைகளை விற்க அனுமதிக்கப்படல், கடத்தப்பட்டோர் விடுவிக்கப்படல், சூறையாடப்பட்ட பொருட்களை மீள ஒப்படைத்தல், கட்டாய மதமாற்றம் அங்கீகரிக்கப்படாமை, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு ஆகிய முக்கிய உடன்பாடுகள் இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்டன.
இரு நாடுகளிலும் சிறுபான்மை ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. கிழக்குப் பாக்கித்தானில் இருந்து (இன்றைய வங்காளதேசம்) இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் இடம்பெயர்ந்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads