லியூசின்

From Wikipedia, the free encyclopedia

லியூசின்
Remove ads

லியூசின் (Leucine) [குறுக்கம்: Leu (அ) L][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUA, UUG, CUU, CUC, CUA மற்றும் CUG. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

உயிரியல் பண்புகள்

லியூசின் கல்லீரல், கொழுப்புத் திசு மற்றும் தசைநார்த் திசுக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு மற்றும் தசைநார்த் திசுக்களில் லியூசின் ஸ்ட்டீரால்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இவ்விரண்டு திசுக்களிலும் கல்லீரலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக லியூசின் உபயோகப்படுத்தப்படுகின்றது.[3]

தசைத்திசுக்களில் புரத உற்பத்தியைத் தூண்டும் ஒரே ஒரு அமினோ அமிலம் லியூசின் மட்டுமே.[4] உப உணவுப் பொருளாக லியூசின் தசைப் புரத உற்பத்தியைத் தூண்டி முதுமையடைந்த எலிகளில் தசைநார்த் திசு சிதைவினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5]

Thumb
நடுநிலை அமிலக்காரக் குறியீட்டில் (pH=7.0) இருமுனை அயனி வடிவம், (S)-லியூசின் (இடது) மற்றும் (R)-லியூசின் (வலது).
Remove ads

உணவு அம்சங்கள்

L-லியூசின் (E641) உணவுச் சேர்ப்பில் மணங்கூட்டியாக வகைப்படுத்தப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள் உணவு, கி/100கி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads