லிஸ்டு நகரம்

From Wikipedia, the free encyclopedia

லிஸ்டு நகரம்
Remove ads

லிஸ்டு அல்லது எல் லிஸ்டு (Lisht or el-Lisht) (அரபி: اللشت, romanized: Al-Lišt), எகிப்து நாட்டின் தெற்கில் உள்ள கீசா மாநிலத்தில் உள்ள பண்டைய கிராமம் மற்றும் தொல்லியல் களம் ஆகும்.[1] இது எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரத்திற்கு தெற்கே 91 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனருகில் பண்டைய இட்ஜ்தாவி நகரம் உள்ளது.

விரைவான உண்மைகள் லிஸ்டு, நாடு ...
Thumb
லிஸ்டு நகரத்தின் முதலாம் அமெனம்ஹத்தின் சிதைந்த பிரமிடு
Thumb
லிஸ்டு நகரத்தின் முதலாம் செனுஸ்ரெத்தின் பிரமிடு

பண்டைய எகிப்தை ஆண்ட மத்தியகால இராச்சியத்தை ஆண்ட் 12-ஆம் வம்சத்தின் (கிமு 1991 – கிமு 1802) மன்னர்களான முதலாம் அமெனம்ஹத் மற்றும் முதலாம் செனுஸ்ரெத் ஆகியோரின் பிரமிடுகள் லிஸ்டு நகரத்தில் உள்ளது. இம்மன்னர்களின் பிரமிடு வளாகங்களைச் சுற்றி அரச குடும்பத்தினரின் சிறிய பிரமிடுகள் மற்றும் அரச அலுவலர்களின் மஸ்தபா எனும் நினைவுக்கட்டிடங்கள் உள்ளது.

Remove ads

அகழாய்வுகள்

லிஸ்டு தொல்லியல் களத்தை பிரான்சு நாட்டு எகிப்தியவியல் அறிஞர் கஸ்டோன் மாபிரே என்பவர் 1882 முதல் 1885 வரை அகழாய்வு செய்தார். பின்னர் நியூயார்க் நகர பெருநகரக் கலை அருங்காட்சியகத்தினர் 1906 முதல் 1934 முடிய அகழாய்வு செய்தனர்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads