லீபெத்சுக் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

லீபெத்சுக் மாகாணம்
Remove ads

லீபெத்சுக் மாகாணம் (Lipetsk Oblast, உருசியம்: Ли́пецкая о́бласть, லீபெத்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் லீபெத்சுக் நகரம். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1.173.513 ஆக இருந்தது.[9]

விரைவான உண்மைகள் லீபெத்சுக் மாகாணம்Lipetsk Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

லீபெத்ஸ்க் ஒப்லாஸ்துவின் எல்லைகளாக வடகிழக்கில் ரயாசன் ஒப்லாஸ்து, கிழக்கில் தாம்போவ் ஒப்லாஸ்து, தெற்கில் வரனியோஷ் ஒப்லாஸ்து தென்மேற்கில் கூர்ஸ்க் ஒப்லாஸ்து மேற்கில் ஓரயல் ஒப்லாஸ்து வடமேற்கில் தூலா வட்டாரம் ஆகியவை அமைந்துள்ளன.

பொருளாதாரம்

இந்த மாகாணத்தில் இரும்பு, இயந்திரப் பொறியியல் போன்ற மிகவும் முக்கியமான தொழிற்துறைகளின் கிளைகள் உள்ளன. பல தொழில் நகரங்களின் நிர்வாக மையமாக லீபெத்ஸ் நகரம் விளங்குகிறது, பிராந்தியத்தில் உள்ள எலிட்ஸ் நகரம் எரிபொருள் மற்றும் ஆற்றல் வணிக மையமாக உள்ளது. எரிவாயு குழாய், மின்னாற்றல் பாதை ஆகியவற்றின் வலைப்பின்னலின் முதன்மையான மையமாக விளங்குகிறது.

வேளாண்மை

பிராந்தியத்தில் வேளாண்மையில் பயிர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை பயிர்கள் போன்றவை அடிப்படையாக உள்ளன. மேலும் கால்நடைகளான மாடுகள், பன்றிகள் , ஆடுகள் , செம்ரிகள், கோழிகள் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தும் தொழில் மிகவும் சிறந்த முறையில் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,173,513 ( 2010 கணக்கெடுப்பு ); 1,213,499 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,230,220 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள் (2010)[9]

  • ரஷ்யர்கள் : 96,3%
  • உக்ரைனியர்கள் : 0.9%
  • ஆர்மேனியர்கள் : 0.6%
  • அசர்பைஜனியர் : 0.3%
  • பிறர்: 1.9%
  • 45.268 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

மொத்த கருத்தரிப்பு விகிதம்[13]
2003 - 1,24 | 2004 - 1,28 | 2005 - 1,27 | 2006 - 1,28 | 2007 - 1,36 | 2008 - 1,43 | 2009 - 1,44 | 2010 - 1,47 | 2011 - 1,47 | 2012 - 1.63 | 2013 - 1.60 | 2014 - 1.66 (இ)

Remove ads

சமயம்

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[14] லீபெத்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 71.3% உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 3% திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர் , 1% முஸ்லிம்கள் , மற்றும் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 15% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 6% நாத்திகர் , மற்றும் 2.7% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads