லூக்கா மோத்ரிச்
குரோஷியன் கால்பந்து வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லூக்கா மோத்ரிச் (Luka Modrić[3][4] பிறப்பு 9 செப்டம்பர் 1985) குரோவாசிய தொழில்முறை கால்பந்து விளையாட்டாளர். எசுப்பானியக் கழகமான ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் மோத்ரிச் குரோவாசியா தேசிய அணியின் அணித்தலைவராவார்.[5] மோத்ரிச் முதன்மையாக நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)#நடுக்கள வீரர்; இருப்பினும் தாக்கும் நடுக்களத்தினராகவோ காப்பு நடுக்களத்தினராகவோ, அல்லது பின்னாலிருந்து ஆட்டத்தை நிர்ணயிப்பவராகவோ விளையாடுகின்றார்.[6] மோத்ரிச் உலகளவில் மிகச்சிறந்த நடுக்கள விளையாட்டாளர்களில் ஒருவராக பரவலாக ஏற்கப்படுகிறார்.
Remove ads
கழக ஆட்டங்கள்
சதர் நகரில் பிறந்த மோத்ரிச் 2002இல் டைனமோ சாக்ரெப் கழகத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சாக்ரெபில் தொடர்ந்து முன்னேறிவந்த மோத்ரிச் 2005இல் தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று லீக் கோப்பைகளை வென்று 2007ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டாளர் பட்டம் வென்றார். 2008இல் ஆங்கில பிரீமியர் லீக் கழகமான டொட்டான்காம் ஆட்சுபரில் இணைந்தார். அவ்வணி 50 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு 2010–11 போட்டியில் காலிறுதி எட்ட பெரிதும் உதவியாக இருந்தார்.[7][8]
2011–12 பருவத்திற்குப் பிறகு டொட்டானகாம் ஆட்சுபரிலிருந்து விலகி ரியல் மாட்ரிட் அணிக்கு £30 மில்லியன் கட்டணத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[9] Modrić signed a five-year contract with the Spanish club.[9] அங்கு பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி மேற்பார்வையில் தன் திறனை வளர்த்துக்கொண்டு தங்கள் அணி லா டெசிமா வெல்லவும் 2013–14 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவின் பருவத்தின் சிறந்த அணி விருது பெறவும் பங்களித்தார். 2016 முதல் 2018 வரை மூன்று வாகையர் கூட்டிணைவு வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். இந்த மூன்று ஆண்டுகளிலுமே பருவத்தின் சிறந்த அணி விருதையும் 2016இல் லா லீகாவின் "சிறந்த நடுக்கள வீரர்" விருதையும் வென்றார். 2017இல் யூஈஎஃப்ஏ வழங்கும் சிறந்த நடுக்கள வீரர் விருது பெற்றார்.
Remove ads
பன்னாட்டுப் போட்டிகள்
மோத்ரிச் குரோவாசியாவிற்காக முதன்முதலில் மார்ச் 2006இல் அர்கெந்தீனாவிற்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார்.[7] அது முதல் குரோவாசியா பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் ஆடி வருகிறார். 2006, 2014, மற்றும் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தனது முதல் பன்னாட்டு போட்டி கோலை இத்தாலிக்கு எதிராக அடித்துள்ளார். யூஈஎஃப்ஏ ஐரோ 2008இல் போட்டியின் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பெருமைபெற்ற இரண்டாவது குரோவாசியர் இவராவார்.[10]
- 21 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads