லெனோவா

From Wikipedia, the free encyclopedia

லெனோவா
Remove ads

லெனோவா (ஆங்கிலம்:Lenovo Group Ltd.) என்பது சீனநாட்டில் தோன்றியப் பன்னாட்டு கணினித் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் சீனத்தலைநகரான பெய்ஜிங் நகரத்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வட கரொலைனா மாநிலத்தின் மோரிசுவில்லே நகரத்திலும் உள்ளது.[3] இந்நிறுவனம் தனி மேசைக் கணினிகள், கைக் கணினிகள், நுண்ணறிபேசிகள், நுட்பக்கணினிகள், வழங்கிகள், மின்னணுத்தரவுத் தேக்ககங்கள், தகவல் தொழிற்நுட்ப மேலாண்மை மென்பொருள்,நுண்ணறித் தொலைகாட்சிகள் ஆகியவற்றை வடிவமைத்து, வளர்த்து, உற்பத்திச் செய்து விற்கிறது. 2014 ஆம் ஆண்டு, லெனோவா நிறுவனமே, உலகின் பல நாடுகளில் அதிக அளவு தனி மேசைக் கணினிகளை விற்பதில் சாதனைப் புரிந்தது.[4]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
விரைவான உண்மைகள் லெனோவா, எளிய சீனம் ...
Remove ads

கட்டமைப்பு

இந்நிறுவனம் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது. இதன் முதன்மை அமைப்புகள், ஆய்வகங்கள் பெய்ஜிங்,மோரிசுவில்லே, சிங்கப்பூர் அமைந்து, நிறுவன இலக்குகளைச் செய்கின்றன. மேலும், சீன நகரங்களான சாங்காய், சென்சென், சியாமென், செங்டூ ஆகியவற்றிலும், யப்பானிலுள்ள யமடோவிலும் முக்கிய கட்டமைப்புகள் செயற்படுகின்றன.

இஎம்சி (EMC) கழகம், 1970 ஆம் ஆண்டு, இருவரால் (Richard Egan & Roger Marino Corporation) உருவாக்கப் பட்டது.[5] 1983 ஆம் ஆண்டிலிருந்து, இஎம்சி, பொதுநிறுவனமாக நியூயார்க் பங்குச் சந்தையில், ஐஓஎம்(IOM ) குறிபெற்று இருந்தது.[6] லெனோவோஇஎம்சி கூட்டு முயற்சி, முன்பு லோமேகா (formerly Iomega) என்று அழைக்கப்பட்டது. மேலும், இக்கூட்டுமுயற்சியை, லேனோவோ இஎம்சி² (lenovo EMC²) என்றும் அழைப்பர். இக்கூட்டுச்செயறபாடு வழியே, புற, கையடக்க, கணிய வலையக, எண்ணிமத் தேக்ககத் தீர்வுகளைத் (networked storage solutions) உருவாக்கி, 410 கோடி எண்ணிமத் தேக்கக இயக்கிகளையும், வட்டுகளையும்(digital storage drives and disks) விற்பனை செய்துள்ளனர்.

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads