வகேலா வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வகேலா வம்சம் (Vaghela dynasty) (ஆட்சி: 1243–1299) என்பது மேற்கு இந்தியாவின் தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதிகளை 1243 முதல் 1304 முடிய ஆண்ட அரசகுலம். சோலாங்கி ராஜபுத்திர அரச குலத்தின் ஒரு கிளைப் பிரிவே வகேலா வம்சமாகும்.
வகேலா அரச குலத்தினரின் தலைநகரம் தற்கால அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா நகரமாகும்.
தில்லி சுல்தானகம் நிறுவப்பட்டப் பின் சௌராஷ்டிர தீபகற்பத்தில் இறுதி இந்து வகேலா வம்ச இராச்சியம், வகேலா வம்சத்தின் இறுதி மன்னர் இரண்டாம் கர்ணதேவன் ஆட்சியின் போது 1299-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் சௌராஷ்டிரம் வெல்லப்பட்டு, குஜராத் பகுதிகள் அனைத்தும் தில்லி சுல்தானகத்தின் கட்டுக்குள் சென்றது. [1][2]
Remove ads
சாதனைகள்
வகேலா குல ஆட்சியாளர்கள் காலத்தில் அபு மலையில் தில்வாரா கோயில் மற்றும் கிர்நாரில் சமணக் கோயில்கள் எழுப்பட்டது.[3][4] மேலும் குடிநீர் தேவைக்காக, அகமதாபாத் அருகே அடாலஜ் கிராமத்தில் ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான, அழகிய அடாலஜ் படிக்கிணறு அமைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
வகேலா வம்ச அரசர்கள்;
- வீர்தவாலா (விசாலன்) ( 1243 - 1262)
- அருச்சுனதேவன் (விசால்தேவன்) ( 1262 - 1275)
- சராங்கதேவன் ( 1275 - 1297)
- இரண்டாம் கர்ணதேவன் ( 1297-1304)
Remove ads
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads