வகையீடு (கணிதம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நுண்கணிதத்தில் வகையீடு (differential) என்பது சாரா மாறி x இல் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து சார்பு y = ƒ(x) இன் மதிப்பு அடையும் மாற்றத்தின் முதன்மைப் பகுதியைக் குறிக்கும்.
வகையீடு dy இன் வரையறை:
இங்கு என்பது சார்பு ƒ இன் x ஐப் பொறுத்த வகைக்கெழு, dx ஒரு கூடுதல் மெய்யெண் மாறி (அதாவது x மற்றும் dx ஆகிய இரு மாறிகளில் அமைந்த சார்பு dy).
ƒ இன் x ஐப் பொறுத்த வகைக்கெழுவை லைப்னிட்சின் குறியீட்டில் எழுத, வகையீடு:
- எனவும் வகையீட்டைக் குறிக்கலாம்.
Remove ads
வரலாறு
சார்பு y = ƒ(x) இல் சாரா மாறி x இல் ஏற்படும் நுண்ணளவு மாற்றம் dx ஐப் பொறுத்து y இல் ஏற்படும் நுண்ணளவு மாற்றம் dy ஆக, வகையீடு லைப்னிட்சால் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் x ஐப் பொறுத்த y இன் கணநேர மாறுவீதம், அதாவது வகைக்கெழு பின்வருமாறு தரப்பட்டது:
- இதுவே வகைக்கெழுவிற்கான லைப்னிட்சின் குறியீடாகும்.
இதில் dy மற்றும் dx இரண்டும் அளவில் நுண்ணியளவானவையாக இருந்தாலும் dy/dx இன் மதிப்பு நுண்ணளவினதாக இல்லாமல் ஒரு மெய்யெண்ணாக இருக்கும்.
லைப்னிட்சின் இந்த நுண்ணளவுகளின் பயன்பாடு பரவலாக விமர்சனத்துக்கு உள்ளானது. லைப்னிட்சின் நுண்ணளவுகள் இல்லாமல் வகையீட்டை வரையறுத்தவர் பிரெஞ்சுக் கணிதவியலாளர் அகஸ்டின் லூயிஸ் கோஷி.[1][2] வேறுபாட்டு ஈவுகளின் எல்லையாக வகைக்கெழு வரையறுக்கப்பட்டு, அதிலிருந்து வகையீடு வரையறுக்கப்பட்டது.
இவ்வரையறையில் dy மற்றும் dx முடிவுறு மெய்யெண் மதிப்புகளை எடுக்கும் இரண்டு புது மாறிகள்[3] லைப்னிட்சால் கூறப்பட்டது போல இவை இரண்டும் நுண்ணளவானவை அல்ல.[4] எல்லைகள் குறித்த தற்காலத்திய கருத்துரு கார்ல் வியர்ஸ்ட்ராசினுடையதாக (Karl Weierstrass) இருப்பினும் வகையீடு குறித்த கோஷியின் கருத்து தற்கால பகுவியல் முறைமைகளில் தரமானதாகக் கருதப்படுகிறது.[5][6]
Remove ads
வரையறை

வகை நுண்கணிதத்தின் நவீன முறைகளில் வகையீடு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:[7]
x எனும் ஒருமாறியில் அமைந்த சார்பு ƒ(x) இன் வகையீடு df , x , Δx ஆகிய இரு சாரா மெய்யெண் மாறிகளில் அமைந்த ஒரு சார்பு.
df(x) அல்லது df என மாறிகளை விட்டுவிட்டும் எழுதலாம். y = ƒ(x) எனில் வகையீட்டை dy எனவும் எழுதலாம்.
dx(x, Δx) = Δx என்பதால் dx = Δx ஆகும். எனவே,
Remove ads
பல மாறிச் சார்புகளின் வகையீடுகள்
x1 மாறியைப் பொறுத்த y இன் பகுதி வகையீடு, x1 இல் ஏற்படும் மாறுதல் dx1 ஆல் y இல் ஏற்படும் மாறுதலின் முதன்மைப் பகுதியாகும்.
x1 ஐப் பொறுத்த y இன் பகுதி வகையீடு:
அனைத்து சாரா மாறிகளைப் பொறுத்த பகுதி வகையீடுகளின் கூடுதல் முழு வகையீடு ஆகும்:
உயர்வரிசை வகையீடுகள்
ஒருமாறியில் அமைந்த சார்பு y = ƒ(x) இன் உயர்வரிசை வகையீடுகள்:[8]
பொதுவாக,
Remove ads
பண்புகள்
வகைக்கெழு, பகுதி வகைக்கெழு, முழு வகைக்கெழு ஆகியவற்றின் பண்புகளிலிருந்து வகையீட்டின் ஒத்த பண்புகளை நேரிடையாகப் பெறலாம். அப்பண்புகள்:[9]
- நேரியல்பு:
a , b இரு மாறிலிகள்; ƒ , g இரு வகையிடத்தக்க சார்புகள் எனில்,
- பெருக்கல் விதி:
ƒ , g இரு வகையிடத்தக்க சார்புகள் எனில்,
- அடுக்கு விதி:
- சங்கிலி விதி:[10]
- y = ƒ(u) மற்றும் u = g(x) வகையிடத்தக்கவை எனில்,
- If y = ƒ(x1, ..., xn), மாறிகள் x1, ..., xn அனைத்தும் மற்றொரு மாறி t ஐச் சார்ந்திருந்தால்,
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads