வக்கான் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

வக்கான் மாவட்டம்map
Remove ads

வக்கான் மாவட்டம் (Wakhan District) ஆப்கானித்தான் நாட்டின் படாக்சான் மாகாணத்தின் 28 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ஆப்கானித்தானின் கிழக்கில், பாமிர் மலையில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வக்கான் தாழ்வாரத்தில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,873 மட்டுமே. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் கான்தூத் நகரம் ஆகும். இம்மாவட்டம் 112 மலைக் கிராமங்களைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் கிர்கிஷ் பழங்குடி இசுலாமிய மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 11,258 சதுர கிலோ மீட்டர் (4,347 சதுர மைல்) ஆகும்.

விரைவான உண்மைகள் வக்கான் واخان (in Pashto and Persian) · Вахон (in Tajik), நாடு ...

இம்மாவட்டம் 3 நாடுகளின் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்துள்ளது. அவைகள்: வடக்கில் தஜிகிஸ்தான், தெற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தான், கிழக்கில் சீனாவின் சிஞ்சியாங் மாகாணம் ஆகும்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads