வக்கான் தாழ்வாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வக்கான் தாழ்வாரம் அல்லது வக்கான் நடைபாதை (பஷ்தூ மொழி: واخان உருது: راہداری راہداری) ஆப்கானித்தான் நாட்டின் தூரக்கிழக்கில் அமைந்த படாக்சான் மாகாணத்தின் பாமிர் மலைகளுக்கு தெற்கே அமைந்த வக்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு குறுகி, நீண்ட புவிசார் அரசியல் பகுதியாகும். கிழக்கில் இத்தாழ்வாரம் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தின் எல்லையைத் தொட்டு நிற்கிறது. மேலும் இத்தாழ்வாரத்தின் வடக்கில் தஜிகிஸ்தான் மற்றும் தெற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் அமைந்துள்ளது.[1][2][3]
வடக்கே பாமிர் மலைகளுக்க்கும், தெற்கே காரகோரம் மலைகளுக்கும் இடையே அமைந்த வக்கான் தாழ்வாரம் சுமார் 350 கிமீ (220 மைல்) நீளமும் 13 முதல் 65 கிலோமீட்டர் வரை (8-40 மைல்) அகலமும் கொண்டது. இந்த உயரமான மலை பள்ளத்தாக்கில் இருந்து பஞ் மற்றும் பாமிர் ஆறுகள் தோன்றி ஆமூ தாரியா ஆற்றை உருவாக்குகின்றது. வக்கான் பள்ளத்தாக்கு வழியாக ஒரு வர்த்தக பாதையை பழங்காலத்திலிருந்தே கிழக்காசியா, தெற்காசியா மற்றும் நடு ஆசியாவுக்குச் செல்லும் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
1893-இல் பிரித்தானியப் பேரரசு, பிரித்தானிய இந்தியா மற்றும் ஆப்கானித்தான் அமீரகம் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் அடிப்படையில் வக்கான் தாழ்வாரம் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்த அடிப்படையில் ஆப்கானித்தான்-பிரித்தானிய இந்தியாவை பிரிக்கும் துராந்து எல்லைக்கோடு 1896-இல் உருவாக்கப்பட்டது.[4] இந்த குறுகிய தாழ்வாரம் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கும், பிரித்தானிய இந்தியாவிற்கும் இடையேயான ஒரு இடையக மண்டலமாக செயல்பட்டது. வக்கான் தாழ்வாரத்தின் கிழக்கு முனை சீனாவின் சின்சியாங் பிராந்தியத்தின் எல்லையாக உள்ளது. 2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, வக்கான் தாழ்வாரத்தில் 12,000 மக்கள் இருந்தனர்.[5] வாகி மற்றும் பாமிரி மக்கள் வசிக்கும் வக்கான் தாழ்வாரத்தின் வடக்குப் பகுதி பாமிர் எனக் குறிப்பிடப்படுகிறது.[6]
Remove ads
புவியியல்



ஆப்கானித்தான் நாட்டின் தூரக்கிழக்கில் அமைந்த படாக்சான் மாகாணத்தில், வடக்கில் பாமிர் மலைகளுக்கும் தெற்கிலும், காரகோரம் மலைகளுக்கும் இடையே அமைந்த வக்கான் தாழ்வாரம் 350 கிமீ (220 மைல்) நீளமும் 13 முதல் 65 கிலோமீட்டர் வரை (8 - 40 மைல்) அகலமும் கொண்ட பனிபடர்ந்த மலைபகுதியாகும். வக்கான் தாழ்வாரத்தின் கிழக்கில் சீனாவின் சிஞ்சியாங் பிரதேசமும் , வடக்கே தஜிகிஸ்தான் மற்றும் தெற்கே ஜம்மு காஷ்மீர் பகுதியான கில்ஜித்-பஸ்டிஸ்தானும் எல்லைகளாகக் கொண்டது. வக்கான் தாழ்வாரத்தின் வடக்கில் பாமிர் மலைகளில் உற்பத்தியாகும் பாமிர் ஆறும், சோர்கு ஏரியும் அமைந்துள்ளது.
வக்கான் தாழ்வாரத்தின் உயரம் மேற்கு பகுதியை விட கிழக்குப் பகுதி உயர்ந்தது. வக்கான் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 4,923 m (16,152 அடி) முதல் 3,037 m (9,964 அடி) வரை உயரம் கொண்டது.[8]வக்கான் தாழ்வாரத்தின் பனிபடர்ந்த வக்கான் ஆறு உற்பத்தியாகிறது. [9]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads