வங்காளத்தின் மக்மூத் சா

வங்காள சுல்தான் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நசிருதீன் மக்முத்சா ( Nāṣiruddīn Maḥmūd Shāh) ( ஆட்சி கி.பி. 1435- 1459) மீட்டெடுக்கப்பட்ட இல்யாசு சாகி வம்சத்தைச் சேர்ந்த வங்காளத்தின் முதல் சுல்தான் ஆவார். முன்பு ஓர் விவசாயியாக இருந்த, இவர் கி.பி.1435 இல் முன்னாள் பிரபுக்களால் வங்காளத்தின் அடுத்த ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்தார். இவரது அமைதியான ஆட்சியின் போது, வங்காளம் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை வளர்ச்சியைக் கண்டது.

Remove ads

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பதவிக்கு வருதல்

மகமூத் 14 ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தில் ஒரு பிரபுத்துவ சுன்னி இசுலாம் குடும்பத்தில் பிறந்தார். இவரது முன்னோர்கள் வங்காளத்தின் தொடக்க இல்யாசு சாகி வம்சத்தினர். இப்பகுதியில் இவரது குடும்பம் நீண்ட காலமாக வங்காளத்தில் இருந்தபோதிலும், மக்மூத்தின் மூதாதையர்கள் சிசுதான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிழக்கு ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள். மக்மூத்தின் உறவினர் சுல்தான் சைபுதீன் அம்சா சாவிடமிருந்து வங்காளத்தின் அரியணையைக் கைப்பற்றிய கணேச வம்சத்தின் ஆட்சியை மக்மூத் பெற்றார். சமகால வரலாற்றாசிரியர் பெரிஷ்தாவின் கூற்றுப்படி, மக்மூத் இந்த காலகட்டத்தில் வங்காளத்தின் கிராமப் புறத்தில் ஒரு விவசாயியாக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது. [1]

கணேச வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான சுல்தான் சம்சுதீன் அகமது சா கி.பி.1435-36 இல் வாரிசு இல்லாமல் இறந்தார். மறைந்த சுல்தானின் உதவியாளர்களில் ஒருவரான " நசீர் அத்-தின் குலாம் " அகமதுவின் மரணத்திற்குப் பிறகு அரியணையைக் கைப்பற்றியதாக பெரிஷ்தா குறிப்பிடுகிறார். 18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான குலாம் உசேன் சலீம் அகமத் அவரது இரண்டு உதவியாளர்களான சாதி கான் மற்றும் நசீர் கான் ஆகியோரால் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார், அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். இறுதியில் நசீர் கான் கட்டுப்பாட்டைப் பெற்றார். [2] ஆயினும்கூட, வங்காளத்தின் பிரபுக்கள் நசீர் கானின் ஏழு நாட்கள், என்ற குறுகிய ஆட்சியை பதவி நீக்கம் செய்தனர். மக்மூத்தின் அரச பரம்பரையைக் கண்டுபிடித்த பிறகு, பிரபுக்கள் மக்மூத்தை அரியணையில் அமர்த்தினார்கள். [3]

Remove ads

ஆட்சி

இவரது ஆட்சியின் போது, ஜான்பூரின் ஷர்கி சுல்தான்கள் தில்லியின் லௌதி சுல்தான்களுடன் ஒரு மோதலில் ஈடுபட்டனர். இது நசிருதீன் மக்மூதின் அரசை அமைதியுடன் வைத்திருந்தது. புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் இவர் தனது நேரத்தை செலவிட்டார். வங்காளத்தின் இராணுவ பலத்தையும் இவரால் மீட்டெடுக்க முடிந்தது. வரலாற்றாசிரியர்களான நிசாமுதீன் அகமது மற்றும் பெரிஷ்தாவின் கூற்றுப்படி, நசிருதீன் மகமூத் சா ஒரு சிறந்த சுல்தானாக அறியப்படுகிறார். மற்றொரு வரலாற்றாசிரியர் குலாம் உசைன் சலீம் இவரது திறமையான நிர்வாகத்தால் முந்தைய சுல்தான் சம்சுதீன் அக்மத் சா ஏற்படுத்திய அடக்குமுறையின் காயங்கள் ஆறிவிட்டதாக கூறுகிறார். [4] இருபத்தி நான்கு வருடங்கள் ஆட்சி செய்த நசிருதீன் கி.பி 1459 இல் இறந்தார்.

இசுலாத்தை பரப்புதல்

கான் ச்கான் அலியின் உதவியுடன், நசிருதீன் மக்மூத் வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவினார். அவர்கள் பள்ளிவாசல்கள், மதப் பள்ளிகள், கல்லறைகள் மற்றும் பாலங்கள் மற்றும் தோண்டிய தொட்டிகளை கட்டினார்கள். இவரது ஆட்சியின் குறிப்பிடத்தக்க மசூதிகள் பின்வருமாறு :

  • அறுபது டோம் மசூதி பேகர்காட்டில் கான் சகானால் கட்டப்பட்டது.
  • கிபி 1443 இல் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாங்கிபூரில் சர்பராசு கான் கட்டிய இரண்டு பள்ளிவாசல்கள்.
  • 1455 இல் கௌடாவில் இலாலி என்பவர் கட்டிய பள்ளிவாசல்.
  • டாக்காவில் பக்த் பினாத் பீபி என்ற பெண்ணால் 1455 இல் கட்டப்பட்ட பள்ளிவாசல் அவரது பெயரால் பினாத் பீபி பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது.
  • 1446 இல் பாகல்பூரில் குர்சித் கான் கட்டிய பள்ளிவாசல்.

பேகர்காட்டில் உள்ள கான் சகான் அலியின் கல்லறையும், அசரத் பாண்டுவாவில் ஒரு அல்லாமாவின் கல்லறையும் இவர் காலத்தில் எழுப்பப்பட்டன. இவரே கௌடா நகரில் கோட்டை மற்றும் அரண்மனைக்கு அடித்தளம் அமைத்தார். அவற்றில், ஐந்து வளைவுகள் கொண்ட கல் பாலம், கோட்டையின் பாரிய சுவர்களின் ஒரு பகுதி மற்றும் கோட்வாலி தர்வாசா ஆகியவை இன்றும் உள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads