முர்சிதாபாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முர்சிதாபாத் (Murshidabad) (Pron: ˈmʊəʃɪdəˌbɑ:d/bæd or ˈmɜ:ʃɪdəˌ) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரம் கொல்கத்தாவிற்கு வடக்கே 238 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வங்காள நவாப்புகளின் தலைநகமாக இருந்த முர்சிதாபாத் நகரம், 1757-இல் நடைபெற்ற பிளாசி சண்டையில் ஆங்கிலேயர்கள், நவாப் சிராச் உத் தவ்லாவிடமிருந்து முர்சிதாபாத் நகரத்தைக் கைப்பற்றினர். பின்னர் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகரத்தை கொல்கத்தாவில் நிறுவியதால், முர்சிதாபாத் நகரம் தனது செல்வாக்கை இழந்தது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 16 வார்டுகளும், 9,829 வீடுகளும் கொண்ட முர்சிதாபாத் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 44,019 ஆகும். அதில் 21,842 ஆண்கள் மற்றும் 21,842 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4414 (10.03%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.94% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 75.09%, முஸ்லீம்கள் 23.86%, மற்றும் பிறர் 1.05% ஆகவுள்ளனர்.[1]
Remove ads
தொடருந்து நிலையம்
4 நடைமேடைகளைக் கொண்ட முர்சிதாபாத் தொடருந்து நிலையத்திலிருந்து கொல்கத்தாவின் புறநகரில் உள்ள சியால்தா தொடருந்து நிலையத்திற்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads