வடக்கு கர்நாடகம்
கர்நாடக பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு கர்நாடகா (North Karnataka), இந்தியாவின் தக்காண பீடபூமியில் கடல்மட்டத்திலிருந்து 300 முதல் 730 மீட்டர்கள் (980 முதல் 2,400 அடி) உயரத்தில் கர்நாடகா மாநிலத்தின் வடக்கில் உள்ளது. இப்பிரதேசத்தில் கிருஷ்ணா ஆறு, பீமா ஆறு, துங்கபத்திரை ஆறு, மலப்பிரபா ஆறு, காட்டபிரபா நதிகள் பாய்கிற்து. வடக்கு கர்நாடகா பகுதியில் பெல்காம் கோட்டம் மற்றும் குல்பர்கா கோட்டம் என இரண்டு கோட்டங்களும், 14 மாவட்டங்களும் உள்ளது. வட கன்னட மாவட்டப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை வடக்கு-தெற்காக அமைந்துள்ளது. இதன் மேற்கிலும், வடக்கிலும் மகாராட்டிரம், வடகிழக்கில் தெலங்காணா, தென்கிழக்கில் ஆந்திரா மாநிலங்கள் எல்லைகளாக உள்ளது.
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் வடக்கு கர்நாடகத்தின் தற்கால குல்பர்கா கோட்டத்தின் பகுதிகள் ஐதராபாத் நிஜாம் இராச்சியத்திலும் மற்றும் பெல்காம் கோட்டத்தின் பகுதிகள்பம்பாய் மாகாணம் மற்றும் சென்னை மாகாணத்திலும் இருந்தது. 1956 மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டத்தின் கீழ் மைசூர் இராச்சியத்துடன், பம்பாய் மற்றும் சென்னை மாகாணத்தின் கீழிருந்த பெல்காம் கோட்டப் பகுதிகள் மற்றும் ஐதராபாத் நிஜாம் இராச்சியத்தில் இருந்த குல்பர்கா கோட்டப் பகுதிகள் இணைக்கப்பட்டு, புதிய கர்நாடகா மாநிலம் 1 நவம்பர் 1956 அன்று நிறுவப்பட்டது.
Remove ads
வடக்கு கர்நாடகாவின் கோட்டங்களும், மாவட்டங்களும்
பெல்காம் கோட்டம்
குல்பர்கா கோட்டம்
நகரங்கள்
வானூர்தி நிலையங்கள்
சுற்றுலா
வரலாறு
இந்திய விடுதலைக்கு முன்னர்
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தற்கால வடக்கு கர்நாடகவின் பெல்காம் கோட்டத்தின் 7 மாவட்டங்கள் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்திலும், தற்கால தெற்கு கன்னட மாவட்டம், உடுப்பி மாவட்டம் பகுதிகள் பழைய தென் கன்னட மாவட்டத்தின் கீழ் சென்னை மாகாணத்திலும்; குல்பர்கா கோட்டத்தின் 7 மாவட்டங்கள் ஐதராபாத் நிஜாம் இராச்சியத்திலும் இருந்தது. மைசூர் சமஸ்தானம் தனியாக கீழ் பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பட்டில் இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பின்னர்
1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் 1956 மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டத்தின்படி ஐதராபாத் நிஜாம் இராச்சியத்தின் கீழ் இருந்த தற்போதைய குல்பர்கா கோட்டத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் பம்பாய் மாகாணம் மற்றும் சென்னை மாகாணத்திலிருந்த தற்போதைய பெல்காம் கோட்டத்தில் உள்ள 7 மாவட்டங்கள் மைசூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டு புதிய கர்நாடகா மாநிலம் 1 நவம்பர் 1956 அன்று நிறுவப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads