வடக்கு கொராசான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு கொரசான் மாகாணம் (North Khorasan Province (Persian: استان خراسان شمالی, Ostān-e Khorāsān-e Shomālī) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது நாட்டின் வட பகுதியில் உள்ளது. மாகாணத்தின் தலைநகராக பொஜ்னோர்டு உள்ளது. வடக்கு கொரசான் மாகாண மாவட்டங்களாக ஷெர்வான் கவுண்டி, எஸ்பரயன் கவுண்டி, மன்ஹே மற்றும் சாமல்கன் கவுண்டி, ரஸ் மற்றும் ஜர்கலன் கவுண்டி, ஜஜார் கவுண்டி, ஃபுரூஜ் கவுண்டி, கர்மீ கவுண்டி போன்றவை உள்ளன. 2004 இல் கொரசான் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட மூன்று மாகாணங்களில் வட கொரசான் மாகாணமும் ஒன்றாகும். இந்த மாகாணமானது 2014 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் ஈரானின் நான்காம் வட்டாரத்தின் ஒரு பகுதிகாக ஆக்கப்பட்டது.[2]
Remove ads
வரலாறு
வரலாற்று காலம் முழுவதும் பெரிய குராசான் பிராந்தியமானது பல வம்சங்கள் மற்றும் அரசாங்கங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியும் கண்டிருக்கிறது. பாரசீகர்கள், அராபியர்கள், துருக்கியர்கள், குர்துகள்,[3] மங்கோலியர்கள், துர்க்மெனியர்கள், ஆப்கானியர்கள் போன்ற பல்வேறு பழங்குடிகள் பல்வேறு காலகட்டங்களில் இப்பகுதியில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றனர்.
ஈரானின் பண்டைய புவியியலாளர்கள் ஈரானை எட்டு பிரிவுகளாகப் பிரித்தனர், இவற்றில் பரப்பளவில் மிகப் பெரியதானது பெரிய குராசான் ஆகும்.
குராசானில் உள்ள மெர்வினை அடிப்படையாக கொண்டு பல ஆண்டுகள் பார்த்தியா பேரரசு இருந்தது.
சசானியப் பேரரசு காலத்தின் போது, மாகாணத்தை நான்கு பிரிவுகளாக கொண்டு "பாட்கோஸ்பான்" எனப்பட்ட தளபதிகள் பகுதிக்கு ஒருவராக என மொத்தம் நான்கு தளபதிகளால் இந்த மாகாணமானது நிர்வகிக்கப்பட்டது.
651ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரேபியப் படைகளால் கொராசனை கைப்பற்றப்பட்டது. இப்பகுதி 820 வரை அப்பாசிய மரபினரின் கையில் இருந்தது. அதன்பிறகு 896 ஆம் ஆண்டு ஈரானிய தாஹீத் குலத்தின் ஆட்சியிலும், 900 இல் சாமனித்து வம்சத்தாலும் ஆளப்பட்டது. பாரசீகத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்த போது கொராசான் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் இங்கு இருந்த நான்கு பெரிய நகரங்களான நிஷாபர், மெர்வ், ஹெரட், பால்க் போன்றவற்றின் பெயர்களால் அழைக்கப்பட்டன.
கசினியின் மகுமூது 994 இல் கொரசானை வென்றார். 1037ஆம் ஆண்டு செல்யூக் பேரரசின் ஆட்சியாளரான முதலாம் துர்கூல் பேக், நிஷாபூரை வெற்றி கொண்டார்.
பல படையெடுப்பாளர்களுக்கு எதிரான பதிலடியை கசினி முகமது கொடுத்துவந்தார். இறுதியாக கஜினி துருக்கியரால் சுல்தான் சான்ஜர் தோற்கடிக்கப்பட்டார். ஆனார் அதன்பிறகும் பலர் படையெடுத்து வந்தனர். 1157 ஆம் ஆண்டில் கொராசானை குவாரசமிய அரசமரபினர் கைப்பற்றினர். 1220இல் இப்பகுதியானது செங்கிஸ் கானால் மங்கோலியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. 1226 ஆம் ஆண்டில் செங்கிஸ் கான் இறந்த பிறகு, கொரசனானின் மரபுரிமையை அவரது மகன் டோலியும் அதன் பின்னர் டோலியின் மகன் ஹூலு என்பவரும் பெற்றனர்.
1368இல் தைமூரின் வசம் கொரசான் வந்தது.
1507இல், கொராசான் உஸ்பெக் பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1747இல் நாதிர் ஷாவின் மரணத்திற்குப் பிறகு இப்பகுதியை ஆப்கானியர் கைப்பற்றினர்.
பின்னர் பாரசீகர்களின் கைகளுக்கு வந்த இப்பகுதிகள் ஈராக்கின் மிகப் பெரிய மாகாணமான கொராசானாக இருந்தது. இது 2004 செப்டம்பர் 29 அன்று இரசாவி கொரசான் மாகாணம், வடக்கு கொரசான் மாகாணம், தெற்கு கொரசான் மாகாணம் என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads