குர்து மக்கள்

From Wikipedia, the free encyclopedia

குர்து மக்கள்
Remove ads

குர்து மக்கள் மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக் (மேல் மெசொப்பொத்தேமியா), வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியா நாடுகளின் மலைப்பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எதுவும் கிடையாது. பெரும்பாலானவர்கள் சன்னி இஸ்லாமியர்களாக இருந்தாலும், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.[13] குர்து ஜனநாயகப் படைகள் இசுலாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து வடகிழக்கு சிரியா மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளை கைப்பற்றினர். [14]

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Thumb
மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியாப் பகுதிகளில் குர்து மக்கள் வாழும் நிலப்பரப்பு
Thumb
1920 ஒப்பந்த வரைபடத்தில் குர்திஸ்தான் நாடு
Thumb
1986-இல் மத்திய கிழக்கில் குர்து மக்கள் வாழ்ந்த பகுதிகள்

குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்களான இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Remove ads

குர்து பேரரசு

அய்யூப்பிய வம்சம்

குர்து இனத்து அய்யூப்பிய வம்சத்தின் சுல்தான் சலாகுத்தீன் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் 1174 முதல் 1254 முடிய 80 ஆண்டுகள் லெவண்ட் பிரதேசமான தற்கால சிரியா, லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்தான் பகுதிகளை ஆட்சி செய்தனர்.[15]

இதனையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads