வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதி From Wikipedia, the free encyclopedia

வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம்map
Remove ads

வடசேரி (Vadasery) தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலின் ஒரு பகுதியாகும். முன்பு நல்ல ரக பருத்தி ஆடைகளைத் தயாரிக்கும் மையமாக திகழ்ந்தது. கைத்தறி நெசவு தேங்கிவிட்டது. மாவட்டத்திலேயே பெரிய சந்தை இங்குள்ளது. காய்கறி, பழவகைகள் மற்றும் பிற பொருட்களும் விற்பனைக்கு வருகின்றன. தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு கூடுகின்றனர். கால்நடைகள், குறிப்பாக உழவுமாடுகள் வாங்க மக்கள் இங்கு கூடுகிறார்கள். ஏராளமான வாழைப் பழவகைகள் வருவது சிறப்பாகும். கேரள மாநிலத்திற்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.[3]

விரைவான உண்மைகள்

மேல்நிலைப் பள்ளிகள், திரையரங்குகள், பெரிய விளையாட்டு அரங்கம், பெரிய சந்தை, வணிகக் களமாகத் திகழ்கிறது. வடசேரியினை அடுத்து வடக்குப் பகுதியில் காத்தரின் பூத் மருத்துவமனையும், தென்பகுதியில் நாகராசா கோவிலும், வடசேரியில் காமாட்சி அம்மன் கோவிலும், பக்கத்திலேயே சிவன் கோவிலும், மேற்குப்பக்கம் பெரிய கிருட்டிணன் கோயிலுமுள்ளன. மாவட்டத்தின் பெரிய கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் வடசேரியில் உள்ளது.

Remove ads

நகைத் தொழில்

வடசேரியில் நான்கு தெருக்களில் பல தலைமுறையாக கோயில் நகைகள் செய்யும் தொழில் செய்ப்பட்டு வருகிறது. வழக்கமான தங்க நகைகளை விட, இவ்வகை நகைகள் சில விஷயங்களில் மாறுபடுகிறது. இதனால் இந்தத் தொழிலானது கைவினைக் கலைகள் பட்டியலில் இருக்கிறது. இந்த நகைகளுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. இத்தொழிலில் வடசேரியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வடசேரியில் இருந்து தமிழக கோயில்கள் மற்றும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கும் கோயில்களுக்கும் நகைகள் போகின்றன.[4] பரத நாட்டியக் கலைஞர்களும் கோயில் நகைகளைப் போல் செய்து பயன்படுத்துவதால் அவர்களுக்கும் இங்கிருந்து நகைகள் செய்யப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads