வட்டவலையம்

From Wikipedia, the free encyclopedia

வட்டவலையம்
Remove ads

கணிதத்தில் வட்டவலையம் (Annulus ) என்பது வளைய வடிவிலுள்ள ஒரு பொருளாகும். வளையவடிவப் பொருட்களுக்கு வடிவவியலில் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. சிறிய வளையம் என்ற பொருள் கொண்ட annulus என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து ஆங்கிலத்தில் இதன் பெயர் உருவானது. ஒரேமையங்கொண்ட இரு வட்டங்களுக்கு இடையேயுள்ள பரப்பு வட்டவலையமாகும். எனவே R ஆரமுள்ள பெரிய வட்டத்தின் பரப்பிற்கும் r ஆரமுள்ள சிறிய வட்டத்தின் பரப்பிற்கும் உள்ள வித்தியாசமே வட்டவலையத்தின் பரப்பாகும்.

Thumb
வட்டவலையம்

வட்டவலையத்துக்குள் வரையக்கூடிய மிகநீளமான இடைவெளியின் நீளத்தைக் கொண்டும் வட்டவலையத்தின் பரப்பைக் கணக்கிடலாம்: வட்டவலையத்துக்குள் வரையக்கூடிய மிகநீளமான இடைவெளியின் நீளம் சிறிய வட்டத்திற்கு தொடுகோடாக அமையும். மேலும் அது சிறிய வட்டத்தின் ஆரத்தோடு சேர்ந்து ஒரு செங்கோண முக்கோணத்தை உருவாக்கும். அச்செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம் R ஆக இருக்கும். பித்தாகரசு தேற்றத்தின்படி,

எனவே வட்டவலையத்தின் பரப்பு:

தொகையிடல் மூலமாகவும் வட்டவலையத்தின் பரப்பைக் காணமுடியும். ஒரு வட்டவலையத்தை மிக நுண்ணியளவு அகலம் dρ மற்றும் பரப்பு 2πρ dρ கொண்ட முடிவிலா எண்ணிக்கையிலான சிறுசிறு வலையங்களாகப் பிரித்துக்கொண்டுப் பின் ρ = r லிருந்து ρ = R வரை தொகையிட மூல வட்டவலையத்தின் பரப்பு கிடைக்கும்:

Remove ads

மெய்ப்புனை கட்டமைப்பு

மெய்ப்புனை பகுப்பியலில் மெய்ப்புனை தளத்தில், ஒரு வட்டவலையம், ann(a; r, R) பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

r -ன் மதிப்பு 0 எனில், இந்த வட்டவலையம், a புள்ளியைச் சுற்றி அமைந்த R அலகு ஆரமுள்ள துளையிடப்பட்ட தட்டாகும்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads