வத்தலக்குண்டு

From Wikipedia, the free encyclopedia

வத்தலக்குண்டுmap
Remove ads

வத்தலகுண்டு (Vatthalagundu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.

இது தேனி - திண்டுக்கல் செல்லும் வழியில், தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது மதுரையிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தப் பேரூராட்சி கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 22,928 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.94 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 169 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். வாழையிலை, வெற்றிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், பருத்தி நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம்.

விரைவான உண்மைகள்
Remove ads

பெயர்க் காரணம்

வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

2011-ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்தலகுண்டு பேரூரட்சியின் மொத்த மக்கள்தொகை 22,928 ஆகும். இதில் இந்துக்கள் 81.80%, கிறித்தவர்கள் 5.35%, இசுலாமியர்கள் 12.68%, மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.[5]

மண்ணின் மக்கள்

  • விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா பெயரை, இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு வைத்து அரசு மரியாதை செய்திருக்கிறது.
  • தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமான கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எழுதிய பி. ஆர். ராஜமய்யர் என்பவர் இங்குள்ள இரட்டைத் தெரு அக்ராஹரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து, மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.
  • மணிக்கொடி இதழின் ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான பி. எசு. இராமையா.
  • எழுத்து இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான சி. சு. செல்லப்பாவின் அம்மா பிறந்த ஊராகும். இங்குதான் இவர் வளர்ந்தார்.
  • திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி
  • டாக்டர் வே விஜயன் தமிழ் மொழி தியாகி
  • தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.

கோயில்கள்

திருமண மண்டபங்கள்

  • துரை புஷ்பம் மஹால்
  • டி. எஸ். எல். மஹால்
  • வி. ஆர். மஹால்
  • வேலு மஹால்
  • ஜி. கே. மஹால்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads