குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குன்னுவாரன்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குன்னுவாரன் கோட்டை எனும் ஊரில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும் .
Remove ads
குன்னுவாரன்கோட்டை
முந்தைய காலத்தில் குன்று - அரண் - கோட்டை என்றழைக்கப்பட்டு, குன்றுவாரங்கோட்டையாக மருவி அழைக்கப்பட்டு வந்தது. தற்போது குன்றுவாரங்கோட்டை என்பதும் மருவி குன்னுவாரன்கோட்டை என்றாகி விட்டது. கண்ணாப்பட்டி என்றும் வட்டார வழக்கில் அழைக்கப்படுகிறது. இங்கு மஞ்சளாறு, வைகை மற்றும் மருதா நதிகள் கூடுகின்றன. எனவே இதை முக்கூட்டுத்துறை என்றும் அழைப்பதுமுண்டு.[1][2] இங்கு 1941ம் ஆண்டில் ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கண்ணகி பாலம் உள்ளது.
Remove ads
காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் உள்ள ஒரு சிவபக்தர் காசிக்கு பாதயாத்திரையாகச் சென்று காசி விசாலாட்சி விசுவநாதர் மற்றும் அன்னபூரணி அம்மனைத் தரிசித்தார். அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு சிவலிங்கத்தை தலைச்சுமையாக எடுத்து வந்தார். அந்த சிவலிங்கத்தை இந்த ஊரில் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் அமைத்தார் என்று இக்கோயிலுக்கான தல புராணம் கூறுகிறது[1]. இக்கோயிலில் விசாலாட்சி தெற்கு நோக்கியும், விசுவநாதர் கிழக்கு நோக்கியும் காசியில் உள்ளதுபோல காணப்படுகின்றனர். இங்கு வைகை வடக்கு நோக்கி (வடவாஹினீ , உத்தரவாஹினீ) செல்வது கங்கை காசிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்வது போல் இருக்கின்றது. தை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய விசேட நாட்களில் இச்சங்கமத்தில் நீராடினால் பிறவிப்பயன் கிட்டும் என்று ஊர் மக்களால் நம்பப்படுகிறது. இங்கு வைகை வேகவதி என்றும் அழைக்கபடுகிறாள்[3]. இங்கு ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு மஹாளய அமாவாசை முதலான நாட்களில் பக்தர்கள் முன்னோர்கள் ஆராதனை செய்து சிவ வழிபாடு செய்கின்றனர்[4].
Remove ads
சிறப்பு
- சிருங்கேரி மடத்தின் 25வது பீடாதிபதி ஜகத்குரு சச்சிதானந்த பாரதீ I (1623-1663) மகா சுவாமிகள் இத்தலத்தில் பிறந்தவர்.[5]. இங்கு அவரது ஜயந்தி விழா ஆவணி மாதம் தேய் பிறை ரோகிணி நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது[6]. சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் இத்தலத்திற்கு 1965ல் விஜயம் செய்துள்ளார். சிருங்கேரி சாரதா பீடத்தின் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் இத்தலத்திற்கு இரண்டு முறை விஜயம் செய்துள்ளார். [7]. ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் 2017 ஏப்ரல் மாதத்தில் இத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளார்.[8].
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads