வத்திராஜூ இரவிச்சந்திரா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

வத்திராஜூ இரவிச்சந்திரா
Remove ads

வத்திராஜூ இரவிச்சந்திரா (Vaddiraju Ravichandra) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார் . இவர் தெலுங்கானா இராட்டிர சமிதியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் தெலங்காணாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர்நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] காயத்ரி ரவி என்று அழைக்கப்படும் ரவிச்சந்திரா, காயத்ரி குழுமத்தின் நிறுவனர் தலைவர், தெலுங்கானா கிரானைட் சுரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் தெலுங்கானா முன்னூரு காபு அனைத்து சங்கத்தின் கூட்டுக்குழு மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தேசிய சங்கத்தின் கெளரவத் தலைவரும் ஆவார்.

விரைவான உண்மைகள் வத்திராஜூ இரவிச்சந்திரா, நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

வத்திராஜு இரவிச்சந்திரா, தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டம், கேசமுத்திரம் மண்டலம், இனுகுர்த்தி கிராமத்தில் 22 மார்ச், 1964 அன்று நாராயணா மற்றும் வெங்கட நர்சம்மாவுக்கு மகனாகப் பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை

வத்திராஜூ இரவிச்சந்திரா 2018 தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வாரங்கல் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால், இத்தேர்தலில் தெலுங்கானா இராட்டிர சமிதியின் கட்சியின் நன்னபுனேனி நரேந்தரிடம் தோல்வியடைந்தார். பின்னர் இவர் 2019-ல் தெஇராச கட்சியில் சேர்ந்தார்.[2] 2022ஆம் ஆண்டு மே 18 அன்று தெலுங்கானா இராட்டிர சமிதியின் உறுப்பினர் பண்டா பிரகாசு பதவி விலகியதால் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு வேட்பாளராக இரவிச்சந்திரா பரிந்துரைக்கப்பட்டார்.[3] மேலும் 23 மே 2022 அன்று மாநிலங்களவைக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] .

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads