வயிறு

From Wikipedia, the free encyclopedia

வயிறு
Remove ads

வயிறு என்பது பாலூட்டிகளின் உடலில் நெஞ்சிற்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியாகவும், கணுக்காலிகள் போன்ற முதுகெலும்பிலிகளில் உடலின் முடிவுப் பகுதியில் நெஞ்சுப் பகுதிக்கு (thorax) அல்லது தலைநெஞ்சுப் பகுதிக்குப் (cephalothorax) பின்னாகக் காணப்படும் துண்டங்களாலான பகுதியையும் குறிக்கும்.[1]. பாலூட்டிகளில் பிரிமென்றகட்டிற்குக் கீழாக ஆரம்பிக்கும் இந்த வயிற்றுப் பகுதி, இடுப்பு வளையத்தின் மேலோரம் வரை சென்று முடிவடையும். இவற்றிற்கிடையிலான இடைவெளி வயிற்றுக்குழி அல்லது வயிற்றறை (abdominal cavity) என அழைக்கப்படும். இந்த வயிற்றறையினுள்ளாக இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற சமிபாட்டுத் தொகுதியுடன் தொடர்புடைய உறுப்புக்களும், சிறுநீரகம், சிறுநீர்க்குழாய்கள் போன்ற உறுப்புக்களும், மண்ணீரலும் அமைந்துள்ளன. சில விலங்கினங்களில் வயிற்றறை மேலும் சிறப்பாக்கம் அடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக அசைபோடும் விலங்குகளில் இந்த வயிற்றறைப் பகுதியானது, அவற்றின் சிறப்பான தொழிற்பாட்டிற்கென நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Thumb
மனிதன், மற்றும் எறும்பின் இன் உடகூற்றியலில் வயிற்றுப் பகுதியை ஒப்பிட்டுக் காட்டும் வரைபடம்
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

உடல் உறுப்புக்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads