எஸ். எஸ். கணேசபிள்ளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எஸ். எஸ். கணேசபிள்ளை (சூன் 28, 1937 - ஆகத்து 30, 1995) வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகாசிரியருமாவார். யாழ்ப்பாணம் வரணியில் பிறந்தார் இதனாலேயே இவர் தனது புனைபெயரை 'வரணியூரான்' என்று வைத்துக்கொண்டார். மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்துமிருக்கிறார்.

விரைவான உண்மைகள் எஸ். எஸ். கணேசபிள்ளை(வரணியூரான்), பிறப்பு ...

இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார்.[1]. கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர்.[1]

இவர் எழுதி நடித்த புளுகர் பொன்னையா, விளம்பர நிகழ்ச்சியாக ஒருவருடம் ஒளிபரப்பான ‘இரைதேடும் பறவைகள்’ நாடகம் ஆகியன பலரது அபிமானத்தைப் பெற்றது. இரைதேடும் பறவைகள் நாடகம் பின்னாட்களில் புத்தக வடிவில் வெளிவந்தது. 1995 இல் நாடகக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு ‘தாத்தாவின் ஆசை’ என்ற நாடகத்தைக் கனடாவில் பல பாகங்களிலும் நடத்தினார்.[1]

Remove ads

வானொலி தொடர் நாடகங்கள்

  • புளுகர் பொன்னையா
  • அசட்டு மாப்பிள்ளை
  • இரை தேடும் பறவைகள்

மேடை நாடகங்கள்

  • பாசச்சுமை
  • நம்பிக்கை
  • புளுகர் பொன்னையா
  • அசட்டு மாப்பிள்ளை
  • கறுப்பும் சிவப்பும்
  • ஒருத்தருக்கும் சொல்லாதே
  • தாத்தாவின் ஆசை

தொலைக்காட்சி நாடகங்கள்

  • சமூக சேவகி
  • நம்பிக்கை
  • காத்திருந்தவன்
  • இனிப்பாருங் கோவன்
  • வருடம் பிறந்தது
  • வாடகை வீடு
  • பாசச்சுமை

திரைப்படம்

சிறுகதைகள்

"வரணியூரான்" என்ற பெயரில் சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற தேசிய தினசரிகளில் எழுதியிருக்கிறார்.[1]

வெளிவந்த நூல்கள்

  • இரை தேடும் பறவைகள் (வானொலி நாடகம்)
  • அசட்டு மாப்பிள்ளை (மேடை நாடகம்)

பட்டம்

இவரது கலைத்திறமையைப் பாராட்டி கமலாலயம் அமைப்பு ‘கலைத்தென்றல்’ பட்டத்தை வழங்கி கெளரவித்தது.

படுகொலை

எஸ். எஸ். கணேசபிள்ளை 1995 ஆகத்து 30 அன்று கொழும்பு, மருதானையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இளைஞர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads