வலங்கைமான் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வலங்கைமான் வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வலங்கைமான் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 71 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 100,645 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 50,209 ஆண்களும், 50,436 பெண்களும் உள்ளனர். 25,114 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 88.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.04% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10249 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 910 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,546 மற்றும் 57 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.2%, இசுலாமியர்கள் 6.39%, கிறித்தவர்கள் 2.31% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[3]

Remove ads

ஆன்மிகத் தலங்கள்

நவகிரக தலங்களில் குரு பகவானுக்குரிய ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் இந்த வட்டத்தில் உள்ளது.

புகழ் பெற்றவர்கள்

தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊரான உத்தமதானபுரம் இந்த வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads