வாசுதேவநல்லூர்

இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக பூலித்தேவன் போரிட்ட இடம் From Wikipedia, the free encyclopedia

வாசுதேவநல்லூர்map
Remove ads

வாசுதேவநல்லூர் (ஆங்கிலம்:Vasudevanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திலுள்ள, சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இங்குள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

இது மதுரை - தென்காசி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவிலும், தென்காசியிருந்து 37 கி.மீ தொலைவிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது திருநெல்வேலியிருந்து 85 கி.மீ. தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்; இராஜபாளையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.40 சகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,833 வீடுகளும், 21,361 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

பொருளாதாரம்

வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையின் தரணி சர்க்கரை ஆலை இயங்குகிறது.[7] விவசாயம் செழிப்பான பகுதி மற்றும் அதிகபட்ச பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9.23°N 77.42°E / 9.23; 77.42 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 178 மீட்டர் (583 அடி) உயரத்தில் இருக்கின்றது.

போக்குவரத்து

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் (NH744) அமைந்திருப்பதால், சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களுக்கும் இராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை போன்ற நகரங்களுக்கும் கேரளா மாநிலத்திற்கும் நிமிட கணக்கில் பேருந்துகள் இயக்கபடுகின்றன.

இந்நகரம் சாலை போக்குவரத்தில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

தொடருந்து நிலையங்கள்

சங்கரன்கோவில், இராஜபாளையம், தென்காசி இரயில் நிலையங்கள் அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.

வானூர்தி நிலையம்

திருவனந்தபுரம் (கேரளா மாநிலம்), மதுரை ஆகிய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் அருகில் உள்ளன.

Remove ads

முக்கிய இடங்கள்

இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக பூலித்தேவன் போரிட்ட இடம் இதுவே ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட மருதநாயகம் என்பவருக்கும் பூலித்தேவனுக்கும் முதன்முதலாக இங்கு போர் நடந்தது அதில் பூலித்தேவன் வெற்றிபெற்றார். இந்த ஊர் பேருந்து நிலையம் அருகே உள்ள மந்தை எனுமிடத்தில் அப்போர் நடந்தது என செவிவழிக் கதைகள் கூறுகின்றன இதை பறைசாற்றும் விதமாக இங்கு ஒரு நடுகல்லும் உள்ளது. அதில் புலித்தேவனின் பெயரும் போர் வீரர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளன.[சான்று தேவை]

சிந்தாமணிநாத சுவாமி கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள முதலாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே திருக்கோவில்) ஆகிய இடங்களில் உள்ளன.

வெங்கடாசலபதி கோவில் இங்குள்ளது.

மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெற்கட்டும் செவல் உள்ளது. 1998-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது.[9]

இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. ஆண்டின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மூலமாக மலை வாழ் மக்களுக்காக 15 குடியிருப்புகள் கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வாசுதேவநல்லூர் தலையணை மலைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

Remove ads

சிறப்பு

  • நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads