வாஜபேய யாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாஜபேய யாகம், ஏழு வகை சோம யாகங்களில் ஒன்றாகும். ஒரு அந்தணர் அல்லது புரோகிதர் தலைமைக் குருவாக உயர்பதவி பெறும்பொழுது செய்யப்படும் வேள்வி ஆகும். இராஜசூய யாகம் செய்த அரசன், பேரரசராக மாறும் போதும் வாஜபேய யாகம் செய்வது மரபாகும்..
வாஜபேய யாகத்தின் விவரங்கள்
முழுமையான சோம யாகம் அக்னிஷ்டோமம் , அத்யக்னிஷ்டோமம் , உக்த்யா , சோதாசி , அதிராத்ரா , அப்தோரியம் மற்றும் வாஜபேயம் ஆகிய ஏழு வகையான யாகங்களைக் கொண்டுள்ளது . வாஜபேயம் என்பது உயர் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வேள்விகளில் ஒன்றாகும் வாஜபேயம் என்ற சொல் வெவ்வேறு அறிஞர்களால் வெவ்வேறு வழிகளில் விளக்கப்படுகிறது. சதபத பிராமணத்தின்படி வாஜ என்ற சொல் உணவைக் குறிக்கிறது, பேயம் என்ற சொல் சோம பானத்தைக் குறிக்கிறது. சதபத பிராமணம் வாஜபேய அன்னபேயத்திற்கு (உணவு மற்றும் பானம்) சமம் என்ற கருத்தைக் கொண்டுள்ளது . வாஜபேயத்தை வழங்குபவன் உணவை வெல்கிறான். வாஜபேயமானது தெய்வங்களும் பலம் பெறும் சடங்கு மற்றும் 'வலிமை பானம்' அதாவது சோம பானம் ( பித்வா ) அருந்துவதன் மூலம் ஒருவன் பலம் பெறுகிறார். இராஜசூய வேள்வி செய்வதன் மூலம் ஒருவர் அரசன் ஆகிறார், வாஜபேய யாகம் செய்வதன் மூலம் பேரரசன் ஆகிறார்.[1]
இராஜசூயம் என்பது சத்திரியர்களுக்கான யாகம், அதே சமயம் வாஜபேயம் பிராமணர்கள் மற்றும் சத்திரியர் இருவருக்கும் உரியது . ஆஷ்வலாயண சிரௌத சூத்திரத்தின்படி - "ஒரு அரசன் வாஜபேய யாகம் செய்த பிறகு இராஜசூய யாகம் செய்யலாம். ஒரு பிராமணர் இராஜசூய யாகம் போன்ற பிரஹஸ்பதிசவம் யாகம் செய்த அந்தணர் வாஜபேய யாகம் செய்து தலைமைக் குருவாகலாம் என தைத்திரீய பிராமணம் கூறுகிறது.
வாஜபேய யாகத்தில் ஏராளமான சடங்குகள் உண்டு அவைகளில் முக்கியமானது தேர் பந்தயம், கம்பம் மீது ஏறுதல் மற்றும் பதினேழு என்ற எண்ணை மீண்டும் மீண்டும் கூறுதல்.[2]
Remove ads
புறநானூற்றில் வாஜபேய யாகம்
புறநானூற்றில் (பாட்டு 166) அந்தணர் கௌணியன் விண்ணந்தாயன் செய்த வாஜபேய யாகம் குறித்துப்பாடுகிறது. சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் செய்த இப்புறநானூற்றுப் பாடலில், அந்தணர் விண்ணந்தாயன் என்பவர் வாஜபேய யாகம் செய்தார் எனக்குறிப்பிடுகிறார். மேலும் இந்த யாகத்தின் முடிவில் விருந்துண்ணும் நிகழ்வின் போது, தானும் விருந்து உண்டதாக மூலங்கிழார் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads