வாட்ச்மென் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாட்ச்மென் (Watchmen) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மீநாயகன் திரைப்படம் ஆகும். எழுத்தாளர் ஆலன் மூர், ஓவியர் டேவ் கிப்பன்ஸ் மற்றும் வண்ணம் கொடுப்பவரான ஜான் ஹிக்கின்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு டிசி காமிக்ஸ் நிறுவனத்தால் இதே பெயரில் பன்னிரண்டு பதிப்புகளாக வெளிவந்த வரம்புக்குட்பட்ட தொடர் வரைகதை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தத் திரைப்படம் ஆகும்[5] டேவிட் ஹேட்டர் மற்றும் அலெக்ஸ் சே ஆகியோரின் திரைக்கதையிலிருந்து ஜாக் ஸ்னைடர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மாலின் அக்கர்மேன், பில்லி குருடப், மத்தேயு குட், கார்லா குகினோ, ஜாக்கி எர்லே ஹேலி, ஜெஃப்ரி டீன் மோர்கன் மற்றும் பேட்ரிக் வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே 1985களில் ஏற்பட்ட பனிப்போரின் போது, ஏற்கனவே தீட்டிய ஒரு சதியைத் துப்புதுலக்கி, அதனையே பிரமாண்டமாகவும் வன்முறையாகவும் பயங்கர அதிரடி சம்பவங்களின் மூலம் சொல்லவரும் மாற்று-வரலாற்றுத் திரைப்படமாகும்.
Remove ads
தயாரிப்பு
அக்டோபர் 1987 முதல் அக்டோபர் 2005 வரை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, வாட்ச்மென் தொடரின் நேரடி-அதிரடி திரைப்பட தழுவல் வளர்ச்சி அடையவில்லை. இதன் தயாரிப்பாளர் லாரன்ஸ் கார்டன் 20ஆம் சென்சுரி பாக்ஸ் மற்றும் வார்னர் புரோஸ். நிறுவனங்களுடனும் தயாரிப்பாளர் ஜோயல் சில்வர் மற்றும் இயக்குநர் டெர்ரி கில்லியம் ஆகியோருடன் சேர்ந்து இந்தத் திரைப்படத்தினை வடிவமைக்கத் தொடங்கினார். பின்னர் சிக்கல்கள் அதிகமாகி திரைப்படமாக்க முடியாதபடி ஆனது. பின்னர் அதை வாட்ச்மென் வெளியீட்டாளர் டி. சி. காமிக்ஸின் சகோதர நிறுவனமான வார்னர் பிரதர்ஸ். பிக்சர்ஸுக்கு மாற்றினர். 2000களில், கார்டன் மற்றும் லாயிட் லெவின் ஆகியோர் யுனிவர்சல் ஸ்டுடியோஸ், ரெவல்யூஷன் ஸ்டுடியோஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
Remove ads
வெளியீடு
முதலில் பிப்ரவரி 23,2009 அன்று ஓடியோன் லெய்செஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த படம் மார்ச் 6,2009 அன்று வழக்கமான மற்றும் ஐமாக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[6] முதல் வாரத்திலேயே 55 மில்லியன் டாலர்களை குவித்தது, உலக அளவில் 185 மில்லியன் டாலர்களை குவித்தது.[7] கிரெக் சில்வர்மேன் (வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகி) இந்த படம் பின்னர் இலாபகரமானதாக மாறியது என்று கூறினார்.[8]
Remove ads
வரவேற்பு
படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படம் எடுக்கப்பட்ட பாணி பாராட்டப்பட்டது. ஆனால் வரைகதையின் கருப்பொருள் ஆழமும் நுணுக்கமும் இல்லாத ஒரு அதிரடித் திரைப்படத்தை உருவாக்கியதாக ஸ்னைடர் மீது குற்றம் சாட்டப்பட்டது..[9] வாட்ச்மென் உலகத்துக்குறிய அடிப்படைக் கூறுகள் அடங்கிய டிவிடி ஒன்றும் வெளியிடப்பட்டது, அதில் ஜெரார்டு பட்லர் நடித்த டேல்ஸ் ஆப் த பிளாக் பிரைட்டர் வரைகதை கதையின் இயங்குபடத் திரையாக்கமும், படத்தின் பின் கதையைச் சொல்லும் மீநாயகர்களின் பழைய வரலாற்றின் விளக்கம் கொண்ட அன்டர் த ஹூட் என்னும் குறும்படமும் சேர்த்து இதன் இயக்க நேரத்தை 3 மணி நேரம் 35 நிமிடங்களாக நீட்டித்து, நவம்பர் 10, 2009 அன்று வெளியிடப்பட்டது. இயக்குனரின் பதிப்பு நாடகப் பதிப்பை விட சிறந்த வரவேற்பைப் பெற்றது.
குறிப்புகள்
மேற்கோள்கள்
நூல் ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
