வாந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாந்தி (Vomiting) என்பது இரைப்பையில் உள்ள உள்ளடக்கங்கள் தள்ளுவிசையுடன் வாய் மூலம் அல்லது சிலவேளைகளில் மூக்கு வழி மூலம் வெளித்தள்ளப்படுதல் ஆகும். வாந்தி உண்டாவதற்கு பற்பல காரணங்கள் உண்டு; இரையக அழற்சி, நஞ்சூட்டம் போன்ற சில உடல்நலப் பாதிப்புகள், சில தொற்றுநோய்கள், மூளைக்கட்டி, மண்டையோட்டுள் அழுத்தமிகைப்பு, அயனாக்கக் கதிர்வீச்சு போன்றன சில குறிப்பிடத்தக்க காரணங்கள் ஆகும். ஒரு நபருக்கு வாந்தி எடுக்கவேண்டும் போல ஏற்படும் உணர்வு குமட்டல் எனப்படும், இதனைத் தொடர்ந்து வாந்தி ஏற்படுவதுண்டு, எனினும் சிலவேளைகளில் வாந்தி வருவதில்லை. சில சந்தர்ப்பங்களில் குமட்டல், வாந்தியைக் கட்டுப்படுத்த வாந்தியடக்கிகள் தேவைப்படக்கூடும். மிகையான அளவு வாந்தி எடுக்கும் நபருக்கு உடலில் இருந்து நீர் வெளியேற்றம் அடைவதனால் உடல் வறட்சி நிலை உருவாகலாம், இதன்போது சிரை வழி நீர்மச் சிகிச்சை தேவைப்படலாம்.[1][2][3]
வாந்தியும் எதிர்க்களித்தலும் வெவ்வேறான செயற்பாடுகள் ஆகும். எதிர்க்களித்தல் அல்லது பின்னோட்டம் என்பது சமிபாடடையாத உணவு இரைப்பையில் இருந்து பின்னோக்கி (மேல்நோக்கி) உணவுக்குழாய் மூலம் தள்ளுவிசையின்றி வாயை அடைதல் ஆகும், இச்சந்தர்ப்பத்தில் வாந்தி எடுக்கும்போது உண்டாகக்கூடிய அசௌகரியங்கள் தோன்றுவது இல்லை, மேலும் இவற்றிற்கான காரணங்கள் வேறுபட்டவையாகும்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads