வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், அமராவதிபுதூரில் அமைந்துள்ளது.
Remove ads
இறைவன் இறைவி
இக்கோயில் இறைவன் பெயர் வந்தருளீசுவரர், இறைவி பெயர் வாழவந்தநாயகி ஆகும்.
அமைவிடம்
காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் நடுக்காட்டில் அமைந்துள்ளது, ஆகையால் இது காட்டுச் சிவன்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலைக் கட்டுவதற்காக, நூற்றாண்டிற்கு முன்பே ஓடைகளை கடப்பதற்கு இரண்டு பாலங்களை அமைத்துள்ளனர். அந்தப் பாலங்கள் இன்றும் சிறப்பாக உள்ளன.
வரலாறு
சிவகங்கை சமஸ்தானதிற்கு உட்பட்ட இப்பழமையான கோயில் ஒரு காலத்தில் சிறிய கோயிலாக இருந்துள்ளது. பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தாரால் கற்றளி கோயிலாக எழுப்பப்பட்டு, கீலக ஆண்டு ஆனி மாதம் 13ஆம் நாள் (26.6.1908) குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.[1]
அமைப்பு
இறைவன் - இறைவி சன்னதிகள், இறைவன் கருவறை மற்றும் அர்த்தமண்டப பஞ்சகோஷ்டத்தில் முறையே நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். நால்வர், கன்னிமூலை கணபதி, முருகன், மகாலெட்சுமி, நடராஜர் சபை, நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் திருச்சுற்றில் அமைந்துள்ளனர்.
வயிநாகரம் குடும்பத்தார்
இக்கோயிலை கட்டிய வயிநாகரம் குடும்பத்தார் மதுரை, திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி, திருப்புத்தூர், காளையார்கோவில், விருத்தாசலம், திருநாவலூர், திருவொற்றியூர், கண்டதேவி ஆகிய தலங்களில் திருப்பணி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
திருப்பணி
1908 குடமுழுக்கிற்குப் பின் ஒரு நூற்றாண்டு கழிந்து, 2010கள் தொடக்கத்தில் கோயில் புனரமைப்பு வேலைகள் தொடங்கப்பட்டு, மிகுந்த பொருட் செலவில் பழுதுபார்த்து, 2019 நவம்பர் மாதம் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.[2]
புகைப்படங்கள்

சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

