வாழ்ந்து காட்டுகிறேன்
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாழ்ந்து காட்டுகிறேன் (Vaazhnthu Kaattugiren) கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். எஸ். கருப்புசாமி இதை தயாரித்துள்ளார். கதை எஸ். எஸ். தென்னரசு, திரைக்கதை மற்றும், வசனங்களை மகேந்திரன் எழுதியுள்ளார்.[1] ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஆர். முத்துராமன், சுஜாதா, இவர்கள் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் பத்மபிரியா, ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்), எம். என். ராஜம், மனோரமா, மற்றும் சுருளி ராஜன் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.
Remove ads
நடிப்பு
ஆர். முத்துராமன் - ராமநாதன்
சுஜாதா -கீதா
பத்மப்பிரியா -பங்கஜம்
ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) - பாஸ்கர் அல்லது சுப்பாராவ்
எம். என். ராஜம் - ராமநாதன் தாயார்
மனோரமா - டோலக் சுந்தரி
எம். பானுமதி - லட்சுமி
சுருளி ராஜன் - குமரப்பா
ராதிகா - வனஜா
விஜயசந்திரிகா - ராணி
எஸ். ராமாராவ் - ( சிறப்புத் தோற்றம்)
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - சந்தானம்
சிவகங்கை சேதுராமன் - பாலாஜி
என்னத்த கன்னையா - சண்முகம்
படக்குழு
கலை: மோகனா
ஸ்டில்ஸ்: வேலாசாமி
வடிவமைப்பு: கே. மனோகர்
விளம்பரம்: எலிகன்ட்
படக்கலவை: ஆர். எம். சூர்யா பிரகாஷ் விஜயா லேபராட்டரிக்காக
தலைப்புகள்: ஜெயராம்
பிராப்பர்டிஸ்: நியோ பிலிமோ கிரப்ட்ஸ்
வெளிப்புறப் படப்பிடிப்பு: துர்கா வெளிப்புறப் படப்பிடிப்பு அலகு
ஒலிப்பதிவு (வசனம்): பி. கோபாலகிருஷ்ணன்
ஒலிப்பதிவு (பாடல்கள்): வி. சிவராம்
ரீ- ரெக்கார்டிங் - வி. சிவராம்
நடனம்: மதுரை கே. ராமு
சண்டை: ஆம்பூர் ஆர். எஸ். பாபு
Remove ads
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைப்பாளார் ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார், பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2] இப்படத்தின் பாடல்களை பின்னணி பாடகர்கள் பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads