கிருஷ்ணன்-பஞ்சு

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிருஷ்ணன்-பஞ்சு ஓர் இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்கள் ஆவர். ரா. கிருஷ்ணன் (1909–1997) மற்றும் சா. பஞ்சு (1915–1984) ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் ரா. கிருஷ்ணன், பிறப்பு ...
விரைவான உண்மைகள் சா. பஞ்சு, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்க கால வாழ்க்கை

ரா. கிருஷ்ணன் 1909 சூலை 18 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார்.[2] தொடக்கத்தில், கோவையில் செயல்பட்டு வந்த பக்சிராஜா ஸ்டுடியோவில் (அப்போதைய கந்தன் ஸ்டுடியோ) பணியாற்றினார்.[3]

சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரத்தில் பிறந்தார்.[2] தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.[3][4][5]

Remove ads

மறைவு

1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[6] பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 சூலை 17 அன்று தனது 87 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads