விக்கிரமோவர்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்கிரமோர்வசியம் (Vikramōrvaśīyam) (சமக்கிருதம்: विक्रमोर्वशीयम् கி பி நான்காம் நூற்றாண்டின் சமசுகிருத மொழி மகாகவி காளிதாசன் இயற்றிய நாடகங்களில் ஒன்றாகும். விக்கிரமோவர்சியம் எனும் காவியம் தேவலோக அரமபையான ஊர்வசி, தனது ஆடல், பாடல் மற்றும் இசையால் சந்திர குல மன்னரான புரூரவனை வெற்றி கொண்ட கதையை விளக்குகிறது.[1]

இந்நிகழ்வு குறித்து இருக்கு வேதத்திலும், மகாபாரத காவியத்திலும் உள்ளது. தேவ மகளிர் ஊர்வசியைக் கேசி என்ற அரக்கன் கவர்ந்துசென்றான். புரூரவன், கேசியிடமிருந்து ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்து விட்டான்..
Remove ads
நாடகக் கதைச் சுருக்கம்
ஊர்வசியை அடைந்து பல்லாண்டுகள் சுகம் பெற்ற மன்னன் பூரூரவனை, ஒரு நாள் ஊர்வசி சொல்லிக் கொள்ளாமல் பிரிந்து சென்றதால் புரூரவன் மனம் கலங்கிப் போனான்.
பின்னர் சோகம் குறைந்தவுடன் மனதில் வைராக்கியம் ஏற்பட்டது. மாபெரும் மன்னனாக இருந்த தான் ஒரு பெண்ணின் வலையில் வீழ்ந்து அவள் கைப்பாவை ஆகினேன். ஊர்வசி என்னிடம் வேத வாக்கியங்களை மேற்கோள்களாக கூறியும், அவளின் நற்போதனைகள் என் மனதில் பதியவில்லை. பாம்பைக் கயிற்றாக எண்ணியது எனது குற்றமே. அறிவாளியாக இருப்பவர்கள், தீயவர் சேர்க்கையை விட்டுவிடவேண்டும். சாதுக்களை அண்டி, சேவை செய்து கொண்டு இருப்பவனுக்கு கர்மத்தளை என்ற அக்ஞான இருள் நீங்கி விடுகிறது. துயரக்கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு பிரம்மத்தை அறிந்த சித்தர்களான ஞானிகள், உறுதியான படகு போன்றவர்கள்.
ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடன் மன்னர் புரூரவனிடத்தில் உலகப் பற்று நீங்கிற்று. அவனுடைய பந்த-பாசங்கள் எல்லாம் அழிந்தன. அவர் ஆத்ம ஞானியாக பற்று -பாசமில்லாமல் மண்ணுலகில் சுற்றித் திரிந்தார்.
Remove ads
பிரபல கலாசாரத்தில்
காளிதாசரின் விக்கிரமோர்வசியம் எனும் நாடகத்தை தழுவி 1957-இல் மணாளனே மங்கையின் பாக்கியம் எனும் தமிழ் திரைப்படம் வெளிவந்துள்ளது.[2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads