விக்டோரியா துறைமுகம்

From Wikipedia, the free encyclopedia

விக்டோரியா துறைமுகம்
Remove ads

விக்டோரியா துறைமுகம் (Victoria Harbor) ஹொங்கொங்கில், ஹொங்கொங் தீவுக்கும் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகமாகும். இந்த விக்டோரியா துறைமுகம் தென்சீனாவின் தெற்கு கடல் பரப்பான, தென்சீனக்கடலில் அமைந்துள்ளது. இது ஹொங்கொங் பிரித்தானியர் கைப்பற்றி குடியேற்றநாடாக பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, ஹொங்கொங்கின் முதன்மை கடல்சார் வணிக மையமாக மாறத்தொடங்கியது. ஹொங்கொங்கின் பிரதான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் இன்றும் ஒரு முக்கிய காரணியாகும்.

விரைவான உண்மைகள் விக்டோரியா துறைமுகம், சீன எழுத்துமுறை ...
Thumb
ஹொங்கொங் தீவு மற்றும் கவுலூன் பகுதிகளின் கரைகள் இரண்டு பக்கமும் தெரிய, நடுவே விக்டோரியா துறைமுகத்தின் கடல்பரப்பு

அத்துடன் இந்த துறைமுகம் என்னற்ற புனரமைப்புத் திட்டங்களுக்கு உள்ளகியுள்ளது. கடலை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட பல நகரமயமாக்கல் திட்டங்களினால், இந்த துறைமுகத்தின் கரையோரப் பகுதிகள் அகன்றதுடன், கடல்பரப்பு குறுகத்தொடங்கியது. தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல கடல் நிரப்பும் திட்டங்களினால் மேலும் மேலும் இத்துறைமுகத்தின் கடல்பரப்பு குறுகிக்கொண்டு போகிறது.

Remove ads

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு

Thumb
விக்டொரியா துறைமுகத்தின் கடல்பரப்புக் காட்சி

ஹொங்கொங் தீவில் இருந்து கவுலூன் பக்க காட்சியை காண்பதற்கும், கவுலூன் பக்கத்தில் இருந்து ஹொங்கொங் தீவை காண்பதற்கு என உலகெங்கும் இருந்து ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் கூடுவர். இவர்களின் அதிகமானோர் விக்டோரியா துறைமுகத்தின் ஊடே கடல் பயணத்தை மேற்கொண்டு, இந்த துறைமுகத்தின் அழகை இரசிக்க முற்படுவர். சுற்றுலா பயணிகளுக்கான பல சிறப்பு வள்ளச் சேவைகளும் உள்ளன.[1][2] மிகவும் பணவசதியுள்ளோர், கடலின் நடுவே ஏழு நட்சத்திர வசதிக்கொண்டு கப்பல் சொகுசகங்களில் பொழுதைப் போக்குவோரும் உளர். அதனைத்தவிர பல மிதக்கும் கப்பல் உணவகங்கள், களியாட்டக் கூடலங்கள் போன்றனவும் இந்து துறைமுகத்தின் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த விக்டோரியா துறைமுகத்தை சூழ சுற்றுலா பயணிகளையும் கவரும் பலவிடயங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானவை நட்சத்திரங்களின் சாலை, ஒவ்வொரு நாளும் சரியாக 8:00 மணிக்கு இடம்பெறும் கதிரியக்க மின்னொளி வீச்சு, சிறப்பு நாட்களில் இடம்பெறும் வண்ண வான்வெடி முழக்கம் போன்றவைகளாகும். அத்துடன் பல அருங்காட்சியகங்களும் உள்ளன.

Remove ads

வரலாறு

Thumb
1845களில் விக்டோரியா துறைமுகத்தின் வரைப்படம்
Thumb
1905களில் பிரித்தானியா கப்பல் கலங்கள் விக்டோரியா துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருக்கும் காட்சி

இந்த விக்டோரியா துறைமுகம் ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. 1841ம் ஆண்டில் ஹொங்கொங் பிரித்தானியர் வசம் வீழ்ந்ததைத் தொடர்ந்து இந்த துறைமுகம் படிப்படியான வளர்ச்சியை நோக்கிச்சென்றது. விமான போக்குவரத்து இல்லாத அக்காலகட்டத்தில், இந்த விக்டோரியா துறைமுகம் ஒரு இடைமாற்றத் துறைமுகமாகவும், நீண்ட நாட்கள் கடல்பயணத்தை மேற்கொள்வோருக்கான ஓய்வு இடமாகவும் இருந்துள்ளது.

வரலாற்றில் தமிழர்

ஹொங்கொங் தமிழர் வரலாற்றில், ஹொங்கொங் வந்த முதல் தமிழர் ஏ. கே. செட்டியார், யப்பான் செல்லும் கடல் வழிப்பயணத்தின் போது ஹொங்கொங்கில் ஒரு இடைமாற்றலாக தங்கிச்சென்றார் என்பதும், அதுவே ஹொங்கொங்கில் முதல் தமிழர் குறித்த பதிவாக இருப்பதும் ஒரு வரலாற்று செய்தியாகும்.

டய்பிங் போராளிகள்

ஹொங்கொங் பிரித்தானியர் வசம் வீழ்ந்ததன் பின்னர், பிரித்தானியர் ஹொங்கொங் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிராக டய்பிங் போராளிகள் எனும் போராளிகள் இந்த துறைமுகப் பகுதிகளில் வந்து பலத்தாக்குதல்களை தொடுத்துள்ளனர். 1854களில் ஹொங்கொங் வீதிகளில் ஆயுதங்களுடன் அணிவகுத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் உள்ளன. 1854, டிசம்பர் 21ம் திகதி ஹொங்கொங் காவல்துறையினர் கவுலூன் நகர் தாக்குதல் தொடர்பாக பல போராளிகளை கைதுச்செய்தனர். இந்த விக்டோரியா துறைமுகத்தில் பல கப்பல் கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. [3]

துறைமுகப் பெயர் வழங்கள்

இந்த துறைமுகத்தின் பெயர் முன்னர் "ஹொங்கொங் துறைமுகம்" என்றே வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஐக்கிய இராச்சிய கூட்டிணைவின் பின்னர் இதற்கு "விக்டோரியா துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4]

Remove ads

புவியியல்

Thumb
விக்டோரியா துறைமுகத்தின் செயற்கைக்கோள் பார்வை

புவியியல் அடிப்படையில், 2004ம் ஆண்டு கணிப்பின் படி விக்டோரியா துறைமுகம் 41.88 கிலோ மிட்டர்களைக் (16.17 சதுர மீட்டர்கள்) கொண்டிருந்தது. இன்று இதன் பரப்பு கடலை நிரப்பி மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களினால் குறுகியுள்ளது.

சில தீவுகள் இந்த விக்டோரியா துறைமுகத்துடன் உள்ளடங்களாகவே உள்ளன. அவைகளாவன:

  • பசுமை தீவு
  • குட்டிப்பசுமை தீவு
  • கவுலூன் பாறை தீவு
  • சிங் யீ தீவு

விக்டோரியா துறைமுகத்தின் அருகாமையில் இருந்து பல தீவுகள் கடலை நிரப்பி மேற்கொள்ளப்படும் பாரிய புனரமைப்பு திட்டங்களினால், பெருநிலப்பரப்போடு இணைக்கப்பட்டவைகளும் பல உள்ளன. அவைகளாவன:

அகலப்பரப்பு காட்சி

Thumb
ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட விக்டோரியா துறைமுகத்தின் இரவுநேர அகலப்பரப்பு காட்சி 2009களில். எதிரே தெரிவது ஹொங்கொங் தீவு

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads