ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் அல்லது ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (Hong Kong Convention and Exhibition Centre) என அழைக்கப்படும் அரங்கம், ஹொங்கொங்கில் உள்ள மாநாடு கூடல், மற்றும் கண்காட்சிகளை நடாத்துவதற்கான எழில்மிகு பிரமாண்டமான மண்டபமாகும். இம்மண்டபம் ஹொங்கொங் தீவில், வஞ்சாய் மாவட்டத்தில், வஞ்சாய் நகரில் விக்டோரியா துறைமுகத்தின் கடல் பரப்பை ஒட்டி, கடலை முகப்பாகக் கொண்டு கடலோரமாக அமைக்கப்பட்டிருக்கும் கண்கவர் மண்பமாகும். இம்மண்டபத்தை சுருக்கமாக (HKCEC) என்றழைப்பர்.


Remove ads
காண்போர் கவரிடம்

இம்மண்டபத்திற்கு நிலத்தின் ஊடாக அல்லாமல், கட்டிடங்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருக்கும் நடைப்பாலங்கள் ஊடாக செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபம் உல்லாசப் பயணிகளையும், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் இடங்களில் ஒன்றாகும். இம்மண்டபத்தின் கடலோர முகப்பு பக்கம், எப்பொழுதும் இரவும் பகலுமாக நிழல்படப் பிடிப்பாளர்கள் நிறைந்து நிற்பார்கள். சுற்றுலா பயணிகளும் இம்மண்டபத்தின் முன்னே நின்று நிழல்படம் எடுத்துக்கொள்வதற்கென்றே வருவோரும் உளர். அத்துடன் இம்மண்டபத்தின் முகப்பு பக்கத்தில் இருந்து பார்க்க, கடலுக்கு அப்பால் தெரியும் கவுலூன் தீபகற்ப முனையின் காட்சியும் சுற்றுலா பயணிகளை இங்கு ஈர்ப்பதற்கு ஒரு காரணமாகும். அதனால் ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில் இதுவும் ஒன்றாகும்.
Remove ads
கட்டடக்கலை
இந்த மண்டபம் பாரியத் திட்டமிடலின் கீழ் கடலை செயற்கையாக நிரப்பி கட்டடப்பட்ட ஒரு கட்டடமாகும். தற்போதும் மண்டபத்திற்கும் பிரதான நிலப்பரப்புக்கும் இடையிலான பகுதி கடலாகவே உள்ளது. இடையே பிரமாண்டமான நடைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. [1] இந்த மண்டபத்தை வடிவமைத்த கட்டடக்கலைஞர் ...
மண்டபத்தின் உள்ளே
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads