விக்ரம் சுகுமாரன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

விக்ரம் சுகுமாரன்
Remove ads

விக்ரம் சுகுமாரன் (Vikram Sugumaran, இறப்பு: ஜூன் 1, 2025) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர் ஆவார். இவர் விமர்சன நோக்கில் பாராட்டைப் பெற்ற மதயானைக் கூட்டம் என்ற படத்தை இயக்கியவர். பொல்லாதவன், கொடிவீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.[1]

விரைவான உண்மைகள் விக்ரம் சுகுமாரன், இறப்பு ...

வாழ்க்கைக் குறிப்பு

விக்ரம் சுகுமாரன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியைச் சேர்ந்தவர். நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்து பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார்.[2] பாலுமகேந்திரா இயக்கத்தில் 1999 முதல் 2000 வரை வெளியான கதை நேரம் என்கிற தொலைக்காட்சித் தொடரில் வெளியான 56 குறும்படங்கள், ஜூலி கணபதி திரைப்படம் ஆகிவற்றில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.[3] வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார். மதயானைக் கூட்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமாக இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கினார். அடுத்து ஏறுதழுவலை மையமாகக் கொண்ட தேரும் போரும் என்ற படத்தை இயக்கி வந்தார்.

Remove ads

இறப்பு

விக்ரம் சுகுமாரன் 2025 சூன் 1 அன்று மாரடைப்பு காரணமாக மதுரையில் இறந்தார்.[4][5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads