விசாகம் (பஞ்சாங்கம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விசாகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 16 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது விசாக நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் விசாக நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" விசாகம் ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினாறாவது நட்சத்திரமாகிய விசாகம் 200° 00'க்கும் 213° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் விசாகத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் துலை இராசியிலும் நான்காம் பாதம் விருச்சிக இராசியிலும் அமைந்துள்ளது.

Remove ads

பெயரும் அடையாளக் குறியீடும்

Thumb
துலை விண்மீன் கூட்டம்

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி விசாக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் துலை விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட விசாக நட்சத்திரத்தின் (α, β, γ, ι லிப்ராய்) பெயரைத் தழுவியது. விசாகத்தின் சமசுக்கிருதப் பெயரான விஷாக்க (Vishakha) என்பது "கிளைத்த வடிவம்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "குயவர் சில்லு" ஆகும்.

Remove ads

சோதிடத்தில் விசாகம்

இயல்புகள்

இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. விசாக நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]

கோள்வியாழன்
தேவதைசத்திராங்கினி
தன்மைகலப்பு
சாதிசூத்திர சாதி
கோத்திரம்அங்கிரா
பால்பெண்
குணம்இராட்சத குணம்
இயற்கை மூலம்நெருப்பு
விலங்குஆண் புலி
பறவைசெவ்வாற்தி
மரம்விளா
நாடிபிங்கலை
Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads