இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

வான் நட்சத்திரத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் இரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.

முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது. 13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை = 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).

இந்துப் பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகள் வாரம், திதி, கரணம், யோகம், நட்சத்திரம் என்பவை.

நமக்கு எல்லாம் தெரிந்த 27 நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருபத்தி எட்டாவதாக ஒரு நட்சத்திரம் உள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அது அபிஜித் நட்சத்திரம். உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் நடுவில் இடம் பெற்றிருக்கக்கூடிய சூட்சும நட்சத்திரம்தான் இந்த அபிஜித் நட்சத்திரம்.

Remove ads

பாதம்

புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 x 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.

Remove ads

அட்டவணை

கீழேயுள்ள அட்டவணை நட்சத்திர அதிபதிகளையும், நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.

மேலதிகத் தகவல்கள் எண்., நட்சத்திர அதிபதி ...
Thumb
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்: ராசி, நட்சத்திரம், நட்சத்திர பாதம், நட்சத்திர அதிபதி, நட்சத்திரப்புல்லி விளக்கப்படம்
Remove ads

தமிழ் பெயர்கள்

அசுவனி முதல் ரேவதி வரையான 27 தமிழ் நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்[1].

வடமொழி சொற்களுக்கு தமிழ் பொருள்

மேலதிகத் தகவல்கள் நட்சத்திரங்கள், பொருள் ...
Remove ads

இராசி அதிபதி

ஒவ்வொரு இராசிக்கும் அதனை இயக்கம் கிரகங்கள் இராசி அதிபதி ஆவார்கள் (இராகு கேது தவிர)

மேலதிகத் தகவல்கள் எண்., இராசி ...

நட்சத்திர அதிபதி அட்டவணை

மேலதிகத் தகவல்கள் எண்., அதிபதி ...

நட்சத்திர அதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் எண்., நட்சத்திரங்கள் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads