விசுவாசராவ்

From Wikipedia, the free encyclopedia

விசுவாசராவ்
Remove ads

சிறீமந்த் விசுவாசராவ் பேஷ்வா (Shrimant Vishwasrao Peshwa) (22 சூலை 1742 - 14 சனவரி 1761) மராட்டியப் பேரரசின் புனேவைச் சேர்ந்த பேஷ்வா, பாலாஜி பாஜி ராவ் பட்டின் மூத்த மகனாவார். மேலும் மராட்டியப் பேரரசின் பேஷ்வா என்ற பட்டத்தின் வாரிசு ஆவார். இவர் தனது சிறு வயதிலிருந்தே நிர்வாகம் மற்றும் போரில் பயிற்சி பெற்றிருந்தார். 1760 இல் நடந்த சிந்த்கேடா மற்றும் உத்கீர் போரில் பங்கேற்றதன் மூலம் மராட்டிய காலாட்படையிடம் இவரது வீரம் பேசப்பட்டது. [1]

விரைவான உண்மைகள் சிறீமந்த்விசுவாச ராவ்பேஷ்வா, ஆட்சியாளர் ...

மூன்றாம் பானிபட் போரில், பஷ்தூன் அதிகாரி ஒருவர் சுட்ட துப்பாக்கியால் இவர் தலையில் தாக்கப்பட்டு [2] இறந்தார். கிராண்ட் டஃப் என்பாரது என்பாரது கருத்துப்படி, இவரது மரணம் குறித்து கேள்விப்பட்ட மல்கர் ராவ் ஓல்கர் குறைந்தது 10,000 வீரர்களுடன் களத்தில் இருந்து பின்வாங்கினார் எனத் தெரிகிறது.

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

Thumb
மராட்டிய கூட்டமைப்பு 1760 ஆம் ஆண்டில் (நீல பகுதி) தக்காணத்திலிருந்து இன்றைய பாக்கித்தான் வரை நீண்டிருந்தது.

விசுவாசராவ் புனேவுக்கு அருகிலுள்ள சூப் பகுதியில் பாலாஜி பாஜி ராவின் மூத்த மகனாகப் பிறந்தார் (புனேவுக்கு அருகிலுள்ள சாகாஜியின் ஆட்சிப்பகுதி). இவர் நிர்வாக விஷயங்களில் பயிற்சியளிக்கப்பட்டார். மேலும், இவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இராணுவ பயிற்சிக்கு ஆளானார். இவர், தனது தாத்தா பாஜிராவின் தோற்றத்தை மரபுரிமையாகக் கொண்டிருந்தார். மேலும், இவர் நல்ல தோற்றப் பொழிவையும் கொண்டிருந்தார். [3]

Remove ads

திருமணம்

இவர், 1750 மே 2 அன்று அரி பாலகிருட்டிண தீட்சித்-பட்வர்தனின் மகள் இலட்சுமிபாய் என்பவரை மணந்தார். [4] 

இறப்பு

மூன்றாம் பானிபட் போரில் ஒரு தளபதியாக இருந்த விசுவாச ராவ் முன் வரிசையில் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு, காயமடைந்து இறந்தார். [5]

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads