விஜயதசமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது.
தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
Remove ads
இராமாயணம்
இராமாயணத்தில், இராவணன் சீதையை கடத்தினான். சீதையை விடுவிக்குமாறு இராமன் ராவணனிடம் கோரினார், ஆனால் இராவணன் மறுத்துவிட்டார். இந்நிலைமை அதிகரித்து போருக்கு வழிவகுத்தது. இப்போரில் இராமன், இராவணனை, விஜயதசமியன்று அழித்து போரில் வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது. வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற இந்நாளை, ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.[1]
Remove ads
மகாபாரதம்
மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர் என்று கூறப்படுகிறது.
தென்னிந்தியா

உலகை ஆட்டிப் படைத்த மகிசாசூரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் நீடித்த போரானது, விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் மகிசாசுரனை துர்க்கை வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.[2] மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.
தமிழகத்தில்
தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று ஆயுதபூசை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads