விஜயரகுநாதராய தொண்டைமான்

புதுக்கோட்டை அரசர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜயரகுநாதராய தொண்டைமான் (Vijaya Raghunatha Raya Tondaiman I (25 ஆகத்து 1713 – 28 திசம்பர் 1769) என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இரண்டாவது சுதந்திர அரசர் ஆவார். இவர் 1730 ஏப்ரல் முதல் 1769 திசம்பர் 28 வரை ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் மராத்திய சாம்ராஜ்யம் மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, சந்தா சாகிப் ஆகியோருடன் இடைவிடாத போர்களில் ஈடுபாட்டார்.

விரைவான உண்மைகள் விஜயரகுநாதராய தொண்டைமான், ஆட்சிக்காலம் ...
Remove ads

முன்வாழ்கை

விஜயரகுநாதராய தொண்டைமான் சாகிப் 1713 ஆகத்து 25 அன்று புதுக்கோட்டை இளவரசரான திருமலைராய தொண்டைமான் சாகிப்புக்கும் அவரது மனைவியான நல்லை ஆய் சாகிப்புக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை 1729 இலேயே இறந்துவிட்டக் காரணத்தினால். இவரது தாத்தா இரகுநாதராய தொண்டைமானுக்குப் பிறகு 1730 இல் இவர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

ஆட்சி

இவரது தாத்தாவும் புதுக்கோட்டை மன்னருமான இரகுநாதராய தொண்டைமான் இறந்த பிறகு 1930இல் குடுமியான் மலையில் விஜயரகுநாதராய தொண்டைமான் மன்னராக முடிசூட்டப்பட்டார். இவர் முடிசூடிக்கொண்டபிறகு விரைவிலேயே தனது அரியணையைக் காக்க உறவினர்களுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபடவேண்டி இருந்த‍து. 1733இல் தஞ்சை மராத்திய படைத்தலைவனாகிய ஆனந்த ராவ் புதுக்கோட்டைமேல் படையெடுத்தார். விஜயரகுநாதராய தொண்டைமான் இருந்த திருமயம் கோட்டையை ஓர் ஆண்டு முற்றுகையிட்டும் அதைப் பிடிக்க முடியாமல் திரும்பினார். திரும்பிச் செல்லும்போது நகரத்தை அழித்துவிட்டுச் சென்றார்.

1750 ஆம் ஆண்டு வெடித்த இரண்டாவது கர்நாடக போரின்போது, விஜய ரகுநாத ராயா தொண்டமான் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராத்தியர்களுடன் இணைந்து சாந்தா சாகிப் மற்றும் பிரஞ்சுக்கார‍ர்களுக்கு எதிராகப் போர்புரிந்தார். பிரித்தானியர்கள் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபோது இவர் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார். 1754 மே மாத‍த்தில் இவரது நாடு பிரெஞ்சு படையெடுப்புக்கு இலக்காகி, இவரது இராஜ்யமானது சீரழிவுக்கு ஆளானது.

Remove ads

குடும்பம்

விஜயரகுநாதராய தொண்டைமானுக்கு ஒரே ஒரு மகனான இராயரகுநாத தொண்டைமான் இருந்தார்.

மேற்கோள்கள்

  • "Pudukkottai 2". Tondaiman Dynasty. Christopher Buyers.
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads