விருந்தீசுவரர் கோவில்

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோவில் From Wikipedia, the free encyclopedia

விருந்தீசுவரர் கோவில்map
Remove ads

விருந்தீசுவரர் கோவில் (Virundeeswarar Temple) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே வடமதுரையில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும்.[1][2]

விரைவான உண்மைகள் விருந்தீசுவரர் கோவில், ஆள்கூறுகள்: ...
Remove ads

கோயில் அமைப்பு

இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், விருந்தீசுவரர் என அழைக்கப்படுகிறார். அம்மன் விஸ்வநாயகி அம்பாள் (பார்வதி, தனிச் சன்னிதியில் தாமரைப் பீடத்தில் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் விரிந்த சடாமுடியுடன் நடன கோலத்தில் இருப்பார். இங்கு முடிந்த சடாமுடியுடனுள்ளார். சிவன் நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்ததாகவும் இதிலிருந்துதான் கோயில்களில் "அதிகார நந்தி' சன்னதி அமைக்கும் பழக்கம் உண்டானதாகவும் மரபுசழிச் செய்தியுள்ளது.[சான்று தேவை] கோவிலுக்குள் லட்சுமி நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் பெருமாளுக்கு ஒரு சிறிய தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் இது கட்டப்பட்டது என அறியவருகிறது.[சான்று தேவை]

மூலவர்விருந்தீசுவரர்
உற்சவர்
அம்மன்/தாயார்விஸ்வநாயகி அம்பாள்
தல விருட்சம்வன முருங்கை
தீர்த்தம்விடகர தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி
Remove ads

தல வரலாறு

சுந்தரர் அவினாசி சென்று அவினாசிலிங்கேஸ்வரையும் கருணாம்பிகையையும் தரிசித்த பின், மிகுந்த களைப்புடனும் பசியுடனும் விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேடுவத் தம்பதியனர் அவருக்கு முருங்கைக்கீரையுடன் உணவு தயாரித்துத் தந்து பசியையும் களைப்பையும் போக்கினர். அவ்வாறு தனது பசிக்கு உணவு தந்தவர்கள் இறைவனும், இறைவியுமே என்பதை உணர்ந்தார் சுந்தரர். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இக்கோயில் ஈசன் "விருந்தீஸ்வரர்' என பெயர் கொண்டார் என்பது மரபு வரலாறாகும். [சான்று தேவை]

Remove ads

அமைவிடம்

கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) கோயம்புத்தூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் துடியலூருக்கு அருகேயுள்ள கு. வடமதுரை என்னும் பகுதியில் இக்கோவில் சாலையோரமாக அமைந்துள்ளது. கோயம்புத்தூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல நிறையப் பேருந்துகள் உள்ளன.

அஞ்சல் முகவரி

அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில்,
வடமதுரை- 641017.
கோயம்புத்தூர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads