விறைக்க முடியாமை

From Wikipedia, the free encyclopedia

விறைக்க முடியாமை
Remove ads

விறைக்க இயலாமை (Erectile dysfunction, ED) என்பது பாலுறவில் ஆண்குறியை விறைக்க அல்லது விறைப்பை நீட்டிக்க இயலாது உடலுறவு கொள்ள முடியாதிருத்தல் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் விறைக்க இயலாமை, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...

ஆண்குறி விறைத்து எழுவது குருதி உள்ளேறி ஆண்குறிக்குள் இருக்கும் கடற்பஞ்சு போன்ற பாகங்களில் தங்குவதால் ஏற்படும் நீர்ம விசையால் ஆகும். பாலுணர்வு தூண்டுதலால் மூளையிலிருந்து ஆண்குறியிலுள்ள நரம்புகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இந்நிலையில் விறைப்பு ஏற்படாதிருக்குமேயானால் அது விறைக்க இயலாமை என்று குறிக்கப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் உள்ளன; அவற்றில் ஒன்றாக குடிநீரில் ஆர்செனிக் கலந்து ஆண்குறியிலுள்ள பொட்டாசியம் கால்வாயில் மாற்றங்கள் நிகழ்வதும் உள்ளது.[2] மற்ற முக்கிய காரணங்களாக குருதிக் குழலிய நோய்கள், நீரிழிவு நோய், நரம்புத்தொகுதி கோளாறுகள், இயக்குநீர் குறைபாடுகள் மற்றும் மருந்துகளின் பின்விளைவுகள் ஆகியன உள்ளன.

உளவியல் சார் விறைக்க இயலாமையில் உடற்குறைபாடுகளாலன்றி எண்ணங்கள் அல்லது உளவியல் காரணங்களால் விறைத்தலோ பாலுறவோ கொள்ள இயலாதிருத்தல் ஆகும். இது வெகு அரிதாகக் காணப்பட்டாலும் இதனை குணமாக்க முடியும். பெரும்பாலும் மருந்து என்று வழங்கப்படும் ஆறுதல் மருந்துக்கு உளவியல் இயலாமை குணப்படும். விறைக்க இயலாமை ஒருவரின் ஆண்மையுடன் பார்க்கப்படுவதால் கடுமையான உளவியல் எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.

Remove ads

மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads