விளிம்பு (வடிவவியல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடிவவியலில் விளிம்பு (edge) என்பது பல்கோணம், பன்முகத்திண்மம் அல்லது உயர்பரிமாண பல்பரப்புகளில் இரு உச்சிகளை இணைக்கும் ஒரு குறிப்பிட்டவகையான கோட்டுத்துண்டாகும்.[1] பல்கோணத்தில் அதன் சுற்றுக்கோட்டிலமைந்த ஒரு கோட்டுத்துண்டாக அமையும் விளிம்பானது, அப்"பல்கோணத்தின் பக்கம்" என அழைக்கப்படும்.[2] பன்முகிகள் மற்றும் பல்பரப்புகளில் அவற்றின் இரு முகங்கள் சந்திக்கும் கோட்டுத்துண்டாக விளிம்பு இருக்கும்.[3] பல்கோண அல்லது பன்முகிகளின் உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ செல்லும்போது இரு உச்சிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் விளிம்புகள் ஆகாது. அவை பல்கோணத்தின் (பன்முகியின்) மூலைவிட்டங்கள் என அழைக்கப்படும்.
- முக்கோணத்தின் மூன்று விளிம்புகள் (பக்கங்கள்): AB, BC, CA.
- சதுரத்தின் நான்கு விளிம்புகள் (பக்கங்கள்).
- அறுமுகியின் கனசதுரம் விளிம்புகள்.
- 4-பல்பரப்பு - நாற்பரிமாண கனசதுரத்தின் விளிம்புகள்
Remove ads
பன்முகியின் விளிம்புகளின் எண்ணிக்கை
ஒரு குவிவுப் பன்முகியின் விளிம்புகளின் எண்ணிக்கை கீழுள்ள "ஆய்லர் பண்பை" நிறைவு செய்யும்:
இதில்,
- V - பன்முகியின் உச்சிகளின் எண்ணிக்கை
- E - பன்முகியின் விளிம்புகளின் எண்ணிக்கை
- F - பன்முகியின் முகங்களின் எண்ணிக்கை
இச்சமன்பாடு "ஆய்லரின் பன்முகி வாய்பாடு" என அழைக்கப்படுகிறது[4][5].
இச்சமன்பாட்டிலிருந்து ஒரு பன்முகியின் விளிம்புகளின் எண்ணிக்கையானது, அதன் உச்சிகள் மற்றும் முகங்களின் எண்ணிக்கைகளின் கூட்டுத்தொகைக்கு 2 குறைவாக இருக்கும் என அறியலாம்.

எடுத்துக்காட்டு: ஒரு கனசதுரத்தில்
- V - உச்சிகளின் எண்ணிக்கை = 8
- F - முகங்களின் எண்ணிக்கை = 6
- E - விளிம்புகளின் எண்ணிக்கை = (8 + 6) - 2 = 12.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads